முழுக்க முழுக்க கமர்ஷியல், காமெடி படமாக சார்லி சாப்ளின் 2 உருவாகிறது. இதில் பிரபுதேவா நாயகனாக நடிக்க, நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதாஷர்மா நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு நடிகையான அதாஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், சமீர் கோச், கோமல் சர்மா, வைபவ் உள்பட பலர் நடிக்கின்றனர்.