பாலிவுட்டின் பாஷா, என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாருக்கானிற்கு தனது 52வது பிறந்த நாள் நேற்று கொண்டாடினார். முதலில் சின்னத்திரையில் தன் கலையுலக பயணத்தைத் தொடங்கி பிறகு வில்லனாக சினிமா உலகில் கால் பதித்து, பிறகு இந்தியாவின் நட்சத்திர நடிகரானார். உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவர் 8வது இடத்தில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.