தென்னாப்ரிக்க சர்க்கார் நடத்தைக்கு காந்திஜி வருத்தம்

டிரான்ஸ்வால் நிறவேற்றுமைச் சட்டத்தைப் பற்றி, மகாத்மா காந்தி, தென்னாப்ரிக்காவுக்கு பின்கண்ட செய்தியை
தென்னாப்ரிக்க சர்க்கார் நடத்தைக்கு காந்திஜி வருத்தம்

டிரான்ஸ்வால் நிறவேற்றுமைச் சட்டத்தைப் பற்றி, மகாத்மா காந்தி, தென்னாப்ரிக்காவுக்கு பின்கண்ட செய்தியை அனுப்பியிருக்கிறார்:
பிரிட்டீஷ் இந்தியர்களை நடத்தும் விதத்தில் தென்னாப்ரிக்க சர்க்கார், தாங்கள் செய்து முடித்த ஒப்பந்தங்களையே நிறைவேற்றாமலிருப்பது எனக்கு வருத்தமாயிருக்கிறது. 1914ல் செய்யப்பட்ட ஸ்மட்ஸ்-காந்தி ஒப்பந்தத்துடன் இந்தப் பிரச்னை தீர்ந்துவிட்டதென்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அங்கு இந்தியர்கள் குடியேறுவது கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, ஏற்கனவே குடியேறியுள்ளவர்களின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை சிதறிவிட்டது. அதற்குப் பிறகு நிலைமை மிகவும் க்ஷீணித்துவிட்டது. வட்டமேஜை மகாநாடுகளும், இதர மகாநாடுகளும் ஒப்பந்தங்களும் நடந்திருக்கின்றன. ஆனால் பிரச்னை தீர்ந்தது என்று இந்தியர்கள் அமைதியாக உட்கார முடியவில்லை.
தாங்கள் சட்ட பூர்வமாக பாதுகாப்பளித்திருக்கும் இந்தியர்களை விரட்டிவிடவேண்டும்; அல்லது சுய மதிப்புள்ள இந்தியர்கள் இனிமேல் தென்னாப்ரிக்காவில் இருப்பதற்கு யோக்கியதையில்லை என்ற நிலைமைக்கு அவர்களைக் கொண்டு வந்துவிட வேண்டும். இந்த இரண்டிலொன்றை செய்யாவிட்டால் தென்னாப்ரிக்க சர்க்காருக்கு திருப்தி ஏற்படாது போலிருக்கிறது. ஆகையால், இந்தியர்களை ஒதுக்கி வைக்கும் இச் சட்டத்தை சட்டமறுப்பின் மூலம் எதிர்ப்பது என்று அவர்கள் செய்திருக்கும் முடிவை நான் நிராகரித்துவிடவில்லை. பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் இந்தியர்களிடையே பூர்ண ஒற்றுமை ஏற்பட வேண்டும். இந்தியாவிலுள்ள பொது ஜனங்கள் (ஐரோப்பியர்களுள்பட) இந்தப் போராட்டத்தை ஆதரிப்பார்களென்று நம்புகிறேன்.

தினமணி (24-05-1939)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com