காந்திஜிக்கு சிறுமி தந்த பணம்!

காந்திஜிக்கு சிறுமி தந்த பணம்!

மகாத்மா காந்தி ஸ்ரீ மகாதேவ தேசாயுடன் இன்று காலை லாகூர் வழியாக எல்லைப்புற மாகாணத்திற்குச் சென்றார். 

மகாத்மா காந்தி ஸ்ரீ மகாதேவ தேசாயுடன் இன்று காலை லாகூர் வழியாக எல்லைப்புற மாகாணத்திற்குச் சென்றார். 
வெய்யில் கடுமையாக விருந்த போதிலும் எல்லா கேட்டுகளிலும் போலீஸ் காவல் பலமாக யிருந்த போதிலும் பிளாட்பாரத்தில் ஏராளமான ஜனங்கள் கூடிவிட்டார்கள். டாக்டர் கோபிசந்த் பார்கவா, மியான் இப்திகருதீன் முதலிய தலைவர்களும் வந்திருந்தார்கள்.
காந்திஜி உற்சாகத்துடனிருந்தார். இந்த ஸ்டேஷனில் பிராண்டியர்மெயில் தங்கியிருந்த சிறிது நேரம் முழுவதும் காந்திஜி ஜன்னலிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருக்கு பிளாட்பாரத்திலிருந்தவர்களில் அநேகர் பணமுடிப்புகள் கொடுத்தார்கள். 
ஒரு சிறுமி கதர்நூற்று சம்பாதித்த ரூ.150-யையும் தானே செய்த கதரையும் காந்திஜியிடம் அளித்தார்.
மற்றொரு பெண் தமது இரு தங்க வளையல்களை கொடுத்தார். பலர் சிறு சிறு தொகைகளை அளித்தார்கள்.
பத்திரிகை நிருபர்களிடம் ஸ்ரீ மகாதேவ தேசாய் சொன்னதாவது:- ""நீண்ட தூர பிரயாணத்தால் மகாத்மா காந்தியின் தேகநிலை பாதிப்பு அடையவில்லை. எல்லைப்புற காந்திக்கு அளித்த ஒரு வாக்கை நிறைவேற்றவே காந்திஜி எல்லைப்புறம் செல்கிறார்.''
முன்னதாக, வழியில் புதுடில்லியில் இறங்கி, 1 மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகே காந்திஜி பழைய டில்லி ஸ்டேஷனுக்குச் சென்றார். அங்கே ஹரிஜன நிதிக்கு பணம் வசூலிக்கப்பட்டது.
மகாத்மா உற்சாகத்துடன் காணப்பட்டார். காந்திஜி எல்லைப்புறத்தில் இரண்டு வாரம் தங்குவாரென்றும் பிறகு சிவகிராமத்திற்குச் செல்வாரென்றும் ஸ்ரீ மகாதேவ தேசாய் அறிவித்தார். வழியில் வடமதுரை ஸ்டேஷனில் காந்திஜிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி (07-07-1939)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com