காந்திஜீ விலகுவதேன்?

காந்திஜீ தமது அறையில் பின் வருமாறு விவாதிப்பதாகத் தெரிகிறது.
காந்திஜீ விலகுவதேன்?

காந்திஜீ தமது அறையில் பின் வருமாறு விவாதிப்பதாகத் தெரிகிறது.

""நான் ஒரு காங்கிரஸ்காரன். எப்பொழுதும் காங்கிரஸ்காரனாகத்தான் இருப்பேன். காங்கிரஸூக்கு நான் திரும்பி வருவதற்கு நிபந்தனைகள் என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். அத்தகைய நிபந்தனையே அனாவசியம். நான் காங்கிரஸ் சேவையிலிருந்து கடுகளவாவது பின்னடையப் போவதில்லை. அவசியம் ஏற்பட்டால் அல்லது நான் வரவேண்டுமென்று நீங்கள் கருதினால், நான் மீண்டும் காங்கிரஸில் சேரத் தயார். ஆனால் என்னுடைய நிலைமையை நீங்கள் நன்குணர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் இந்தியாவில் என் ராஜீய வேலையை ஆரம்பித்த போது நான்கு வேலைகளை முக்கியமாகச் செய்யவேண்டி யிருக்கும் என்று நான் கருதினேன். பாமர மக்களின் பொருளாதார முன்னேற்றம், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, மதுவிலக்கு, ஹரிஜன முன்னேற்றம் இவை நான்குந்தான்.

இந்த நான்கு துறைகளில் நான் சரிவர தேச சேவை செய்ய முடியும். இவைகளின் மூலமாகத்தான் பாமர மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கப்போகிறது.

இந்த நான்கு துறை வேலைத்திட்டத்தில் என்னைப்போல் அவ்வளவு தீவிர நம்பிக்கை படித்த மக்களிடத்தி லில்லை.

இராஜீயப் போரை என் தலைமேல் வகித்து என் கடமையைச் செய்தாய் விட்டது. என் வாழ்நாளின் கடைசிக்காலத்தை, யாதொரு நிர்ப்பந்தமும் குந்தகமுமில்லாமல், நான் இராஜீயத்துறையின் இறங்கிய போதே மேற்கொண்ட இந்த நான்கு துறைகளிலும் வேலைசெய்வதற்காக, விடுவிப்பீர்களென்று நம்புகிறேன். அந்த வேலைகளில் எனக்கு இன்னும் தீவிர நம்பிக்கை இருந்துவருகிறது''.

மகாத்மா காந்திஜீயின் மனதை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் அவரது அறைக்குள் சென்ற ஒவ்வொரு தலைவரும் காந்திஜீ சொல்வதைக் கேட்டு அவரது அபிப்ராயத்துக்கே வந்து விட்டனர்.

தினமணி (23-10-1934)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com