பேச்சுவார்த்தையில் வைஸ்ராய்க்கு ஆர்வமில்லை

வைஸ்ராயை சந்தித்துப் பேச ஒரு சந்தர்ப்பம் வேண்டுமென்று தாங்கள் கேட்பீர்களா? என்று மகாத்மாவை ஒரு நிருபர் கேட்டார்.
பேச்சுவார்த்தையில் வைஸ்ராய்க்கு ஆர்வமில்லை

வைஸ்ராயை சந்தித்துப் பேச ஒரு சந்தர்ப்பம் வேண்டுமென்று தாங்கள் கேட்பீர்களா? என்று மகாத்மாவை ஒரு நிருபர் கேட்டார்.
நான் அவ்வாறு கேட்கப் போவதில்லை என்று மறுத்து விட்டார் மகாத்மா. இன்று காந்திஜி அலகாபாதுக்குப் போய்க் கொண்டிருந்த போது ரயிலில் ஒரு பத்திரிகை நிருபர் சந்தித்துச் சில கேள்விகள் கேட்டார். காந்திஜி பதிலளித்தார்.
அலகாபாதில் நடைபெற விருக்கும் ஆலோசனைகளின் பலனாக பதவிகளை ஏற்க காங்கிரஸ்காரர் இசைய சாத்தியமுண்டா? என்று நிருபர் கேட்டார்.
இப்போது அது பற்றி ஏதும் சொல்ல காந்திஜி மறுத்துவிட்டார்.
பிறகு நிருபர் கீழ்கண்ட கேள்வியைக் கேட்டார்.
இந்திய தேசீய காங்கிரஸ் பிரதிநிதிக்கும் இந்திய வைஸ்ராய்க்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்பது பற்றி பிரிட்டிஷாருக்கு உண்மையான ஆர்வமிருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? 
அப்படியேதும் இருப்பதாகத் தெரியவில்லை யென்று காந்திஜி சொல்லிவிட்டார். நிருபர் பிறகு கேட்டார்:- 
வைஸ்ராயை சந்தித்துப் பேச தாங்களாவது ஒரு சந்தர்ப்பம் தேடுவீர்களா?
மாட்டேன் என்று மறுத்து விட்டார், மகாத்மா.
அழைப்பு வைஸ்ராயிடமிருந்து வருமானால் தாங்கள் செல்வீர்களா? என்று நிருபர் கேட்டார். அதற்கு காந்திஜி பின்வருமாறு பதிலளித்தார்.
எனக்கு இப்போது ஹோதா எதுவும் இல்லை. இப்போது காங்கிரஸ் அக்ராசனர் ஒருவரைத்தான் அழைத்து பேசலாம் என்று கூறினார்.
திங்கள்கிழமை காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற போகிறது. காலை 10 மணிக்கு முந்தி காந்தி, சுபாஷ் சந்திர போஸ் முதலிய தலைவர்கள் வந்து சேர மாட்டார்கள். காந்திஜி மெளன விரதமாதலால் பகல் 12 மணிக்கு முன் பேசமாட்டார். ஆகவே, காரியக் கமிட்டி காலையில் கூடப் போவதில்லை.

தினமணி 26-04-1937

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com