கவர்னர்கள் மந்திரிகளுக்கு விட்டு கொடுக்க வேண்டும்

அலகாபாதில் காரியக் கமிட்டி செய்த தீர்மானத்தைப் பற்றி விவரிக்குமாறு நிருபர் மகாத்மாவைப் பேட்டி கண்டு கேட்டார். அவைகளுக்கு மகாத்மா பதிலளித்தார். 
கவர்னர்கள் மந்திரிகளுக்கு விட்டு கொடுக்க வேண்டும்

அலகாபாதில் காரியக் கமிட்டி செய்த தீர்மானத்தைப் பற்றி விவரிக்குமாறு நிருபர் மகாத்மாவைப் பேட்டி கண்டு கேட்டார். அவைகளுக்கு மகாத்மா பதிலளித்தார்.
 "காங்கிரஸ் காரியக் கமிட்டி செய்த தீர்மானத்துக்கும் காமன்ஸில் பட்லர் செய்த அறிக்கைக்கும் வித்யாசம் மிகமிகக் குறைவாக இருக்கிறதே. அதைத் தாங்கள் கவனித்தீர்களா?'' என்று நிருபர் கேட்டார்.
 "அப்படியிருக்குமானால் காங்கிரஸ் தீர்மானப்படி காங்கிரஸ் தலைவர்களுக்கு வாக்குறுதி தந்து பதவிகளை ஒப்படைக்குமாறு கவர்னர்களுக்கு ஸ்ரீ. பட்லர் சொல்லட்டுமே. அவ்வாறு சொல்வதற்கு இடைஞ்சலொன்றும் இப்போது இல்லையல்லவா'' என்றார் மகாத்மா.
 "ஜெட்லண்ட் பிரபுவின் அறிக்கையை ஒருபுறத்தில் வைத்துவிட்டு பட்லர் அறிக்கையை மட்டும் கவனியுங்கள். அதில் அவமரியாதையூட்டத்தக்கதாக ஏதேனுமிருக்கிறதா, சொல்லுங்களேன்'' என்று கேட்டார் நிருபர்.
 " காங்கிரசுக்கு இருப்பது போன்ற மெஜாரிட்டியுடைய கட்சியெதுவும் என் கண்ணில் படவில்லை. அப்படிப்பட்ட நிலைமையில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை, ஏதோ மகஜர் போடும் ஆசாமிகளாக பாவிப்பது பொருந்துமா? அவர்கள் மந்திரிகளாக ஆகியிருப்பார்களெனின் தங்களுக்குப் பேட்டி வேண்டுமென்று கவர்னர்களைக் கெஞ்சும்படியான ஸ்திதி இருக்க விடலாமா? ஒருவேளை பேட்டி கோருவார்களெனில் அதை கவர்னர்களும் ஒரேயடியாக மறுத்துவிடவும் கூடும்.
 நான் நினைத்த சுயாட்சியின்படி எவ்வெப்போது கவர்னர்களைச் சந்திக்க வேண்டுமென்று மந்திரிகள் விரும்புகிறார்களோ அவ்வப்போது பேட்டி கிடைத்தாக வேண்டும்; மந்திரிகளுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் கோபமோ திருப்தியின்மையோ ஏற்பட்டால் அப்போது கவர்னர்கள் மந்திரிகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்'' என்று காந்திஜி பதிலுரைத்தார்.
 

தினமணி (07-05-1937)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com