படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லையா? கவலை வேண்டாம்!

ஞாபக சக்தி, கவனக்குறைவு மற்றும் மூளை செயல்பாடு ஆகிய அனைத்தையும் மேம்படுத்துவதற்கான தீர்வு நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே நிறைந்துள்ளது. 
படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லையா? கவலை வேண்டாம்!


ஞாபக சக்தி, கவனக்குறைவு மற்றும் மூளை செயல்பாடு ஆகிய அனைத்தையும் மேம்படுத்துவதற்கான தீர்வு நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே நிறைந்துள்ளது. அதாவது ‘ஸ்மார்ட்’ உணவுகள் என்று அழைக்கப்படும் இவை ஆரோக்கியமான மூளை பராமரிப்பிற்கு வழிசெய்து கவனக்குறைவு, ஞாபக மறதி போன்ற பல பிரச்னைகளை சரி செய்துவிடுகிறது.

அறிவாற்றலை மேம்படுத்தும் உணவு வகைகள்:


1. இனிப்புச் சுவை - விழிப்புணர்வை அதிகரிக்கும்

இனிப்பு என்பது நம் மூளைக்கு மிகவும் விருப்பமான சுவையாகும், இன்னும் கேட்டால் மூளையின் ஒரு முக்கிய எரிபொருள் மூலம் இது. இனிப்பு என்றவுடன் சர்க்கரையை அள்ளி அள்ளிச் சாப்பிட்டு விடலாம் என்று திட்டமிடாதீர்கள், மூளைக்குத் தேவையான இனிப்பு என்பது பழ வகைகளில் இருக்கும் குளுக்கோஸில் உள்ள இனிப்புச் சுவை ஆகும். படிக்கும் நேரங்களில் முழு பழத்தையோ அல்லது பழச் சாறாகவோ பழங்களை எடுத்துக்கொள்வது நினைவுத்திறனை அதிகரிக்கும்.
 

2. காலை உணவைத் தவிர்க்காதீர்கள்:

காலை உணவு என்பது நம் உடலுக்கு மட்டுமில்லாமல் மூளைக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும். காலை உணவைத் தவிர்ப்பது நினைவாற்றலை இழக்கச் செய்வதோடு கவனக் குறைபாட்டையும் ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு முடிவுகள். குறிப்பாக நார் சத்து நிறைந்த உணவு வகைகள், முழு தானியங்கள் மற்றும் பழங்கள் காலையில் உட்கொள்ளச் சிறந்த உணவாகும். அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவைக் காலை வேலையில் உண்பதும் கவனக் குறைபாட்டை ஏற்படுத்தும்.


3. மீன் வகைகள்:

மூளையின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒமேகா-3 என்னும் கொழுப்பு அமிலம் மீன்களில் நிறைந்துள்ளது. மூளைக்குத் தேவையான புரதச்சத்து அதன் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. மீனில் இருக்கும் சத்துக்கள் மூளை மட்டுமின்றி இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 


4. சாக்லேட் மற்றும் பருப்பு வகைகள்:

பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகளில் வைட்டமின் ஈ சத்து அதிகமாக இருக்கும், இது வயதிற்குக் குறைவான அறிவாற்றல் போன்ற குறைபாடுகளை தடுக்கும். இதைத்தொடர்ந்து டார்க் சாக்லேட்டில் இருக்கும் காஃபின், மூளையைத் தூண்டி செய்யும் வேலையில் அதிக கவனம் செலுத்த உதவுகிறது.
{pagination-pagination}

5. புளூபெர்ரி - மூளை சேதத்தை தடுக்கும்:

விலங்குகளின் மேல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புளூபெர்ரி பழம் மூளையில் ஏற்படு சேதத்தை சரி செய்து மறதி போன்ற நோய்கள் வருவதைத் தடுக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் இளமையான தசை மற்றும் கற்றல்  செயல்பாடுகளை மேம்படுத்தும். 


வேறு சில உணவு வகைகள்:

(i) தேங்காய் எண்ணெய்
(ii) ஆலிவ் எண்ணெய்

(iii) மஞ்சள்
(iv) முட்டை
(v) தக்காளி


உங்களின் உணவு பழக்கத்தின் மூலம் விலைமதிப்பற்ற மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அதன் செயல்பாட்டையும் கட்டுப்படுத்த முடியும். ஆகையால் எப்பொழுதும் உங்கள் உணவைச் சமநிலையில் வைத்திருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com