சர்க்கரை நோய்: தேவை துல்லிய சிகிச்சை

சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை  அளிக்க முடியாது. மொத்தம் 20 வகையான சர்க்கரை நோய்கள் உள்ளன.
சர்க்கரை நோய்: தேவை துல்லிய சிகிச்சை


சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை  அளிக்க முடியாது. மொத்தம் 20 வகையான சர்க்கரை நோய்கள் உள்ளன.

இந்த வகைகள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து வகைப்படுத்த குறிப்பிட்ட பரிசோதனைகள் முக்கியமாகும். அப்போதுதான்  எந்த வகை சர்க்கரை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கண்டறிய முடியும். அதன் பின்னரே அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.   டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையத்தில்  சர்க்கரை நோய்க்கு துல்லிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்சுலின் ஊசி மருந்து: வகை 1 சர்க்கரை நோய் உள்ளவருக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட வேண்டும். வகை 2 சர்க்கரை நோய்க்கு இன்சுலினை விட மாத்திரைகள் மிகவும் நன்றாக வேலை செய்யும். இதைப் போன்ற பல்வேறு வகையான சர்க்கரை நோய்கள் உள்ளன. 

கடுமையான சர்க்கரை நோயால்  பாதிக்கப்பட்ட  16 வயது பெண்ணுக்கு வகை 1 சர்க்கரை நோய் இருப்பதாக தவறாக முடிவு செய்யப்பட்டது.  அவருக்கு நாள்தோறும் 4 இன்சுலின் ஊசி மருந்துகள் போட்டுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் என்னை அணுகினர். நான் அவருடைய குடும்ப வரலாற்றை ஆய்வு செய்தபோது நான்கு தலைமுறைகளாக அவருடையை குடும்பத்தினருக்கு  கடுமையான சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.



டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையத்தில் கடந்த பல ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கான பகுப்பாய்வு  முறைகளை உருவாக்கியுள்ளோம்.   துல்லிய சிகிச்சை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் ஒருவர் எந்த வகையினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கண்டறிந்து அவருக்கு சிகிச்சை அளிக்க முடியும். 

 டாக்டர் வி.மோகன்,
தலைவர் மற்றும் 
சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்
டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் 
சிறப்பு சிகிச்சை மையம், 
drmohans@diabetes.ind.in
www.drmohandiabetes.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com