பாலியல் பிரச்னைகளுக்கு ஆளான பெண் குழந்தைகளின் நிலை!

சிறிய வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண் குழந்தைகள் எட்டு அல்லது
பாலியல் பிரச்னைகளுக்கு ஆளான பெண் குழந்தைகளின் நிலை!

சிறிய வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண் குழந்தைகள் எட்டு அல்லது பத்து மாதங்களுக்கு முன்னரே பூப்பெய்துகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

வழக்கத்துக்கு முன்னதாக பெண் குழந்தைகள் குறிப்பிட்ட ஒரு வருடத்துக்கு முன்பாக பூப்பெய்துவது என்பது பெரிய கால அளவு வித்தியாசம் இல்லைதான் எனினும் இக்குழந்தைகள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடும் பாதிப்புக்கு ஆளாவதால் பூப்பெய்துதல் என்ற இயற்கையான நிகழ்வு இவர்களுக்கு விரைவில் ஏற்பட்டுவிடுகிறது என்கிறார் பெனிசில்வேனியா நாட்டு பல்கலைக்கழத்தின் பேராசிரியர் ஜென்னி நொள்

உடலுக்கென ஒரு கணக்கு உள்ளது. இயல்பாக இயற்கையாக ஒரு பெண் மலர வேண்டும். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அந்நிகழ்வுக்கு அவள் மெல்ல தயாராக வேண்டும். ஆனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குழந்தைகள் அதற்குப் பின் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அவர்களுடைய ஹார்மோன்களும் பாதிப்படைகின்றன. அதனால் உடலுக்கென உரிய காலக் கணக்கில் குழப்பம் ஏற்பட்டு அது மாறிவிடுகிறது. எனவே இயற்கையாக நிகழ வேண்டிய பூப்பெய்துதல் சம்பவம் அவர்களுக்கு சற்று முன்னதாக நடந்துவிடுகிறது என்கிறார் நொள்.  

மன முதிர்ச்சி அடையாத குழந்தைகள் பூப்பெய்தும் போது அவர்கள் சிறுமியாகவும் இல்லாமல் வளர்ந்த பெண்ணாகவும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத நிலை பெரும் சோகம் என்றும் நொள் பதிவு செய்கிறார்.

பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட 84 பெண் குழந்தைகள் மற்றும் 89 சாதாரண பெண் குழந்தைகளை வைத்து ஆய்வு செய்ததில் இந்த உண்மையை நொள் கண்டறிந்துள்ளார்.

மற்ற குழந்தைகளைவிட பாலியில் வன்புணர்வுக்குட்பட்ட குழந்தைகள் கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு முன்னரே பூப்பெய்தி விட்டார்கள். அவர்களது ஈஸ்ட்ரோஜன் சுரப்பு மாறுபடுவதால் பிற்காலத்தில் மார்பக புற்றுநோய் அல்லது கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்படக் கூடிய அபாயமும் இவர்களுக்கு அதிகமுள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் வெளியிட்டார். மேலும் அவர் கூறுகையில், இந்தக் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிப்படைந்துள்ளனர், பதின் வயதில் கர்ப்பம் அடையும் பிரச்னைகளும் இவர்களுக்கான மற்றொரு அச்சுறுத்தல் என்றார் நொள்.

இந்த ஆய்வின் முடிவு ஜர்னல் ஆஃப் அடொலசண்ட் ஹெல்த் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com