மாரடைப்பு: அறிகுறிகள் என்ன?

உறவினருக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்துக் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சி அடையாதவர் யாருமே இருக்க முடியாது
மாரடைப்பு: அறிகுறிகள் என்ன?

உறவினருக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்துக் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சி அடையாதவர் யாருமே இருக்க முடியாது. எனவே இதய நோயாளிகள் அனைவரும் மாரடைப்புக்கான அறிகுறிகள் குறித்து தெரிந்து வைத்திருப்பதன் மூலம் உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று பலன் அடையலாம்.
உலக இதய நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, மாரடைப்பு குறித்து ஆக்ஸிமெட் மருத்துவமனை டாக்டர் அயாஸ் அக்பர் கூறியதாவது :
மாரடைப்பு என்பது இதய தசைகள் இறந்து சிதைவுறுதல் ஆகும். நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிக வியர்வை, நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல், இடது தோள்பட்டை, கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் உள்ளிட்டவை இருதய நோய்களுக்கான அறிகுறிகளாகும். ஆண்களுக்கு பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது போல் தோன்றும். பெண்களுக்கு நெஞ்சு எரிச்சல், மூச்சுத் திணறல், மேல் வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றும்.
நோயாளிகளிடமோ அல்லது உறவினர்களிடமோ இத்தகைய அறிகுறிகளைத் தெளிவாக கேட்ட பின் மேலும் சில உடல் பரிசோதனைகள் செய்து நோயின் விவரங்களை அறியப்படும்.
ஆக்ஸிமெட் மருத்துவமனையில் உலக இதய நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இதயம் தொடர்பான பரிசோதனைகள் 50 சதவீத சலுகைக் கட்டணத்தில் செய்யப்படுகின்றன. அதாவது, ரூ.9,600 மதிப்புள்ள பரிசோதனை ரூ.4,800-க்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு டாக்டர் அயாஸ் அக்பர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு,
ஆக்ஸிமெட் மருத்துவமனை,
அண்ணா சாலை, நந்தனம்,
தொலைபேசி:044-42131010/1014/1016

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com