'நடமாடும் இலவச மருத்துவ சிகிச்சை திட்டம் விரைவில் தொடக்கம்'

எஸ்.ஆர்.எம். பிசியோதெரபி கல்லூரியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, நடமாடும் இலவச பிசியோதெரபி மருத்துவச் சிகிச்சை திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர்
இந்திய தொழுநோய் மருத்துவச் சேவை மையத்தின் இயன்முறை மருத்துவருமான என்.ஆர்.ராஜாவுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார் பல்கலை வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர்
இந்திய தொழுநோய் மருத்துவச் சேவை மையத்தின் இயன்முறை மருத்துவருமான என்.ஆர்.ராஜாவுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார் பல்கலை வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர்

எஸ்.ஆர்.எம். பிசியோதெரபி கல்லூரியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, நடமாடும் இலவச பிசியோதெரபி மருத்துவச் சிகிச்சை திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் கூறினார்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எஸ்.ஆர்.எம். பிசியோதெரபி (இயன்முறை) கல்லூரியின் வெள்ளி விழாவில் அவர் பேசியது:
பிசியோதெரபி சிகிச்சை முறையின் தேவை, அவசியம் குறித்த விழிப்புணர்வு தற்போது சாமானியர்களிடமும் சென்றடைந்துள்ளது. மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேரை உரிய பிசியோதெரபி சிகிச்சை மூலம் குணமாக்க முடியும் என்று கண்டறியப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
கல்லூரியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, மருத்துவக் கல்லூரியைச் சுற்றி 20 கி.மீ. சுற்றளவில் பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படும் ஏழை, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்காக நடமாடும் இலவச பிசியோதெரபி மருத்துவ சிகிச்சை திட்டம் தொடங்கப்படும் என்றார் அவர்.
விழாவில், இந்திய தொழுநோய் மருத்துவச் சேவை மைய மருத்துவரும், முன்னாள் மாணவருமான என்.ஆர்.ராஜா உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
எஸ்.ஆர்.எம்.மருத்துவக் கல்லூரி முதல்வர் சுந்தரம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com