"சாலை விபத்துகளால் எலும்பு மூட்டு பாதிப்பு அதிகரிப்பு'

சாலை விபத்துகளில் சிக்கி காயமடைவோருக்கு அதிக அளவில் எலும்பு மூட்டு பாதிக்கப்படுவதாக சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயண பாபு கூறினார்.
சர்வதேச எலும்பு மூட்டு தினத்தையொட்டி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வாயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு மனிதச் சங்கிலியில் பங்கேற்ற செவிலிய மாணவிகள்.
சர்வதேச எலும்பு மூட்டு தினத்தையொட்டி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வாயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு மனிதச் சங்கிலியில் பங்கேற்ற செவிலிய மாணவிகள்.

சாலை விபத்துகளில் சிக்கி காயமடைவோருக்கு அதிக அளவில் எலும்பு மூட்டு பாதிக்கப்படுவதாக சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயண பாபு கூறினார்.
சர்வதேச எலும்பு மூட்டு தினம், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500 }க்கும் மேற்பட்டோர் இணைந்து விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடத்தினர். மேலும் வாகன ஓட்டிகளுக்கும், மருத்துவமனைக்கு வருவோருக்கும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயணபாபு கூறியது:
தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பது, அதிக வேகத்தில் செல்வது உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு அதிக அளவில் எலும்பு மூட்டு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
கணினி முன்பு அமர்ந்து பணியாற்றும் பெரும்பாலான இளைஞர்கள் சூரியஒளியையே பார்ப்பதில்லை. எலும்பின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி மிகவும் அவசியமாகும். எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் அரை மணி நேரம் சூரியஒளி உடலில் படுவது அவசியம் என்றார் அவர்.
முடநீக்கியல் துறையின் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துறையின் இயக்குநர் டாக்டர் முகமது இஸ்மாயில் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com