இந்த நோய் உங்களுக்கும் இருக்கலாம்!

சிலருக்கு சில காட்சிகளைப் பார்த்தாலே பிடிக்காது. ஒவ்வாமை அல்லது அருவறுப்பு
இந்த நோய் உங்களுக்கும் இருக்கலாம்!

சிலருக்கு சில காட்சிகளைப் பார்த்தாலே பிடிக்காது. ஒவ்வாமை அல்லது அருவறுப்பு ஏற்படும். உதாரணமாக காபியின் நுரையைப் பார்க்கவே சிலருக்கு எரிச்சலாக இருக்கும். ஒரு சிலர் ஸ்பான்ஞ்சில் உள்ள சின்ன சின்ன ஓட்டைகளைப் பார்த்தால் அலர்ஜியாக இருக்கிறது என்பார்கள். இந்த ஒவ்வாமை நிலை ஏன் ஏற்படுகிறது? காரணம் சிலருக்கு தொற்று நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் குறித்து அளவுக்கு அதிகமான அச்சம் இருப்பதால் அதைப் போன்ற வடிவத்தில் வேறு எதையும் பார்க்கும் போது அருவறுப்பும் பயமும் கொள்கிறார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி.

இந்த பிரச்னைக்குப் பெயர் ட்ரைபோபியா (Trypophobia). இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் அறியப்பட்டவை என்னவெனில் மக்கள் ஓட்டைகள் அல்லது வட்ட வடிவத்தில் சுருள் சுருளாக சில பொருட்களைப் பார்த்து பயந்திருக்கிறார்கள். திரளாக ஒருசில விஷயங்களை (க்ளஸ்டர்) பார்த்தால் கூட ஒவ்வாமை கொண்டார்கள். கொத்து கொத்தாக ஒரு பொருளைப் பார்த்தால் உடனடியாக அச்சம் கொண்டார்கள். இதற்கான காரணம்  அவர்கள் அடிமனத்தில் இத்தகைய வடிவங்கள் வேறொன்றை அவர்களுக்கு நினைவுபடுத்துகின்றன. உதாரணமாக இவ்வடிவங்கள் சில வகைப் பாம்புகள் மற்றும் நீல வளையங்கள் கொண்ட ஆக்டோபஸ் போன்ற நச்சு விலங்குகளில் காணப்படுகின்றன.

ஆராய்ச்சியாளர் டாம் குப்ஃபர் தலைமையில் பிரிட்டனில் கென்ட் பல்கலைக்கழகம்  புதிய ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. இந்த நிலைக்கு காரணம் பரிணாம வளர்ச்சியால்  சுற்றுச் சூழலிலிருந்து ஏற்படக் கூடிய சில தொற்று நோய்கள் குறித்து அதிகப்படியான அச்சத்தால் அவர்கள் சில உருவத் திரள்களைப் பார்த்து அருவறுப்படைந்து அதன் காரணமாக பயம் கொள்கின்றனர் என்கிறார். 

தோலில் ஏற்படும் சில தொற்று நோய்களின் வடிவம் வட்டமாக இருப்பதையும் இக்குழுவினர் குறிபிட்டுள்ளனர். சின்னம்மை, தட்டம்மை, ரூபெல்லா, டைபஸ் மற்றும் ஸ்கார்லெட் காய்ச்சல் ஆகிய நோய்களும், அதே போல் பிராணிகளால் ஏற்படக்கூடிய ஸ்கேபிஸ், டிக்ஸ் மற்றும் போட்ஃபிளை போன்ற பல நோய்களும் வட்டமான ஒரு வடிவத்தில் தோல் மீது கொத்தாக வந்திருக்கும்.

ஜர்னல் காக்னிஷன் அண்ட் எமோஷன் எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், ட்ரைபோபியாவில் பாதிக்கப்பட்ட 300-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். ஒப்புமைக்காக ட்ரைபோபியாவில் பாதிக்கப்படாத 300 பல்கலைக்கழக மாணவர்களும் இந்த ஆய்வில் பங்கேற்க சம்மதித்தனர்.
 
இரு குழுவினருக்கும் பதினாறு வகை கிளஸ்டர் படங்களைக் காண்பிக்கப்பட்டன. பொறி பொறியாகவோ, தடிப்புக்களாகவோ தோலில் ஏற்படும் திரளான புண்கள் போன்ற உடல் பாகங்கள் தொடர்பான எட்டு படங்கள் அதில் இடம்பெற்றன.

மற்ற எட்டுப் படங்களில் நோய்மை பற்றி இல்லாமல் வடிவம் மட்டுமே இருந்தன. உதாரணத்துக்கு துளையிடப்பட்ட செங்கல் சுவறு, தாமரை மலரின் மையப் பகுதி போன்றவை.

இரண்டு குழுவினரிடம் பேசிய போது பல்கலைக்கழக மாணவர்க் குழு தங்களுக்கு எந்த படமும் எவ்வித உறுத்தலோ அருவறுப்போ ஏற்படுத்தவில்லை என்றனர். ஆனால் ட்ரைஃபோபியா பிரச்னை உடையவர்கள் இவற்றைப் பார்த்தவுடன் மிகவும் அறுவறுப்படைந்தார்கள்.
 
இந்த கண்டுபிடிப்பானது உறுதியாக சொல்வது என்னவென்றால் ட்ரைபோபியா பிரச்னையுடைய நபர்கள் அதீதமான அறுவருப்படையும் மனநிலை உடையவர்களாக இருக்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால் காபி நுரையைப் பார்த்தால் கூட மேற்சொன்ன பூச்சி புழுக்கள் சுருண்டிருப்பதைப் பார்ப்பது போலத் தான் அவர்களுக்குள் ஒவ்வாமை தோன்றும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com