மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.1,348 கோடி'

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.1,348 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இணை இயக்குநர் செல்வவிநாயகம் கூறினார்.

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.1,348 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இணை இயக்குநர் செல்வவிநாயகம் கூறினார்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் 'குறைந்த செலவில் அனைவருக்கும் சுகாதாரம்' என்னும் தலைப்பில் சென்னையில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இணை இயக்குநர் செல்வவிநாயகம் பேசியதாவது:
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், கடந்த 2009 ஆம் ஆண்டில் தொடங்கியபோது ரூ.650 கோடியாக இருந்த காப்பீட்டுத் தொகை, தற்போது ரூ.1,348 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த செலவில் அனைவருக்குமான சுகாதாரம் கிடைக்க அரசு மட்டுமின்றி பிற துறைகளின் கூட்டு முயற்சியும் தேவை. தமிழகத்தில் ஏறத்தாழ 1.58 கோடி குடும்பங்களுக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் உள்ளது என்றார் அவர்.
முன்னதாக கருத்தரங்க தொடக்க விழாவில், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சிக்கான ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) உறுப்பினர் பி.ஜே.ஜோசப் பேசியதாவது:
சுகாதாரத்தில் தமிழகம் பிற மாநிலங்களவைவிட முன்னேற்ற நிலையில் உள்ளது. 17 -ஆம் நூற்றாண்டிலேயே மருத்துவமனையும், 1939 -ஆம் ஆண்டில் பொது சுகாதார சட்டத்தையும் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவில் 38 கோடி பேர் பல்வேறு நிறுவனங்களின் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளனர் என்றார் அவர்.
கருத்தரங்கில், இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவர் பி.ரவிச்சந்திரன், பல்வேறு துறைச் சார்ந்த மருத்துவர்கள், காப்பீட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com