தடுப்பூசியால் உருவானது புற்றுநோய் கட்டிதானா? எய்ம்ஸ், மும்பை டாடா நினைவு மருத்துவமனையிடம் அறிக்கை பெற உத்தரவு

தடுப்பூசியால் உருவான கட்டியானது புற்றுநோய்தானா என்பது குறித்து தில்லி எய்ம்ஸ், மும்பை டாடா நினைவு புற்றுநோய் மருத்துவமனையிடம் அறிக்கை பெறும்படி, தமிழக அரசின் சுகாதாரத் துறைச்
தடுப்பூசியால் உருவானது புற்றுநோய் கட்டிதானா? எய்ம்ஸ், மும்பை டாடா நினைவு மருத்துவமனையிடம் அறிக்கை பெற உத்தரவு

தடுப்பூசியால் உருவான கட்டியானது புற்றுநோய்தானா என்பது குறித்து தில்லி எய்ம்ஸ், மும்பை டாடா நினைவு புற்றுநோய் மருத்துவமனையிடம் அறிக்கை பெறும்படி, தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கொமராபாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(28). கூலி தொழிலாளியான இவருக்கு சுசீலா(24) என்ற மனைவியும், ஆறு வயதில் அன்பரசு என்ற மகனும் உள்ளார்.
சிறுவனுக்கு ஆறு மாதம் இருக்கும் போது, அங்கன்வாடி மையத்தில் அம்மை தடுப்பூசி வலது தொடையில் போட்டுள்ளனர். பின்னர் ஊசி போட்ட இடத்தில், சிறிய ரத்தக்கட்டு உருவானது. பின்னர் பெரிதாக வளர்ந்தது. தற்போது சிறுவனுக்கு ஆறு வயதாகும் நிலையில், மூன்று கிலோ எடையில் புற்றுநோய் கட்டியாக மாறியுள்ளது.
இதுவரை, சிறுவனின் சிகிச்சைக்கு ரூ.3 லட்சத்துக்கும் மேல் செலவழித்தும் குணமடையவில்லை. இது குறித்து தமிழ் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்த செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வானது, தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர், ஈரோடு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் நலவாரிய ஆணையர் ஆகியோர் மார்ச் 27-ஆம் தேதியன்று
பதிலளிக்கவும், சிறுவனுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், புற்றுநோயால் அவதிப்படும் சிறுவன் அன்பரசுவுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அடையாறு புற்றுநோய் மையத்தில் அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டதால் சிறுவனுக்கு இந்த புற்றுநோய் கட்டி ஏற்படவில்லை. அம்மைக்காக தடுப்பூசி போட்டதற்கும், புற்றுநோய் ஏற்பட்டதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என தெரிவித்து இருந்தார்.
இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசின் துரித நடவடிக்கையைப் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் தடுப்பூசி போட்டதால் உருவான கட்டி, புற்றுநோயாக மாறியதாக உலகத்தில் எங்கும் இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை என்று தெரிவித்திருப்பதை மட்டும் ஏற்று வழக்கை முடித்து வைக்க முடியாது.
எனவே, தமிழக அரசின் இந்த அறிக்கையை தில்லி எய்ம்ஸ் மற்றும் மும்பை டாடா நினைவு மருத்துவமனைகள் ஆய்வு செய்து, ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்.5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com