உங்கள் அருகிலேயே பறக்கும் ஈக்கள் எமன்களாகவும் மாறலாம்! எச்சரிக்கை!

ஈக்களால் பலவித கெடுதல்கள் இருப்பினும் இந்த ஆய்வுகளின் முடிவில் அவை மனித
உங்கள் அருகிலேயே பறக்கும் ஈக்கள் எமன்களாகவும் மாறலாம்! எச்சரிக்கை!

ஈக்கள் மொய்க்கப்பட்ட உணவை சாப்பிட்டால் அது ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்தில் ஒரு ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான பல்வேறு வகை பாக்டீரியாக்களை ஈக்கள் உணவுப் பொருட்களின் மீது பரப்புகின்றன, மனிதர்கள் அந்த உணவைச் சாப்பிடும் போது அந்த நோய்க் கிருமிகள் பரவுகின்றன. ஈக்களானது பூவிலும் மொய்க்கும் அருவருத்தக்க பொருட்களின் மீதும் நிற்கும். இப்படி வெவ்வேறு இடங்களில் தடம் பதித்த அவை நேராகப் பறந்து உங்கள் தட்டில் உள்ள உணவில் ஒரு நொடி நின்றால் கூட போதும், ​​அவை இலவசமாகக் கொண்டு வரும் கிருமிகளால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஈ, கொசு இவை இல்லாத வீடுகள் இல்லை எனலாம். அதுவும் சமையல் அறையில் அதிகம் வட்டமடித்தபடி இருக்கும் ஈக்களை நாம் எதிரிகளாகக் கருதுவதில்லை. ஆனால் அவை சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் என்றபடியால், நாமும் ஏதாவது வழிமுறைகளில் அவற்றின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி வந்தாலும், அவை அளவில் மிகச் சிறியதாக இருப்பதால் நம்முடைய முயற்சிகள் அத்தனையும் முறியடித்து எப்படியாவது தப்பி வீட்டினுள் புகுந்துவிடும். அதுவும் மழைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். ஈக்கள் மற்றும் ஈசல்களின் படையெடுப்பு அதிகமிருக்கும். சமைத்த பாத்திரங்களை மூடி வைத்தும், சாப்பிடும் போது ஃபேனை வேகமாக சுழலவிட்டும்  ஓரளவுக்கு அவை நம் அருகில் வராமல் பார்த்துக் கொள்ளலாம். 

ஆனால் தெருவில் விற்கப்படும் உணவுகளில் ஈ மொய்க்க அதிக வாய்ப்பிருப்பதால் அத்தகைய உணவுகளைத் தவிர்ப்பதே உடல் நலனுக்கு நல்லது என ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைக்கிறார்கள். மேலும் சுற்றுலா போகும் போதும், திறந்தவெளி உணவுக் கடைகளில் சாப்பிடும் போதும், அங்கு உணவைச் சுகாதார முறையில் தயாரிக்கவோ பரிமாறவோ முடியாது. எனவே அங்கு சாப்பிட வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.

116 வகை ஈக்களில் உள்ள நுண்ணுயிரிகளின் கூறுகளையும் அவை மூன்று வெவ்வேறு கண்டங்களில் இருக்கின்றன எனவும் இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவை எந்த நோய்களை பரப்பி வருகின்றன என்பதையும் தெரிந்து கொண்டனர்.

'பொது சுகாதார அதிகாரிகள் இது குறித்த அவதானிப்புக்களை சரிவர கண்காணிக்கவில்லை. இனியாவது விழிப்புணர்வுடன் செயல்பட்டு நோய்க் கிருமிகள் பரவாமல் இருக்க வழிமுறைகளை முன்னெடுப்பார்கள் என நம்புகிறோம்’ என்றனர் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி பேராசிரியர்களான டொனால்ட் பிரையன்ட் மற்றும் எர்னஸ்ட் சி. பொல்லர்ட்.

சிங்கப்பூர் நன்யாங் டெக்னாலஜிகல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குனரான ஸ்டீபன் ஸ்குஸ்டர், ஈக்களின் கால்கள் மற்றும் இறக்கைகள் உள்ளிட்ட உடல் பாகங்களிலுள்ள நுண்ணுயிரிகளை ஆராய்ந்தார். 

ஈக்கள் கால்களின் வழியே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நுண்ணுயிர்களை கடத்திச் செல்லப்படுகிறது என்று அவர் கூறினார்.

அழுகிப் போன பொருட்கள், இறந்த உடல்கள் மற்றும் அருவருத்தக்க பல இடங்களில் ஈக்கள் பெரும்வாரியாக மொய்க்கின்றன. தங்களுடைய குட்டிகளுக்கும் அதையே உணவாக அளிக்கின்றன. அவை அங்கிருந்து எடுத்தாளும் நோய்க்கிருமிகளை அவை செல்லும் இடங்களுக்கு எல்லாம் பரப்பி வருகின்றன. இந்த நோய்க்குறியை ஆராய்ச்சி செய்தபோது 15-க்கும் மேற்பட்ட ஆய்வுகளில் ஹெலிகோபாக்டர் பைலோரி (Helicobacter pylori) எனும் நோய்க்கூறு இப்படித்தான் பரவி, மனிதர்களுக்கு குடல் புண்களை ஏற்படுத்துகிறது என கண்டுபிடித்தனர் ஆராய்ச்சியாளர்கள். 

சுகாதாரமற்ற நகர்ப்புற சூழல்களில் திறந்த வெளியில் உணவுகளைப் பரப்பி வைத்து சாப்பிடுவது நோய்களுக்கு ஈக்கள் மூலம் வரவேற்பு கொடுப்பது போன்றதுதான். அப்படியே நீங்கள் சுற்றுலாவில் சந்தோஷமாக சாப்பிட வேண்டும் என்றால் சாக்கடை, தூசு, போன்றவை இல்லாத வனப் பகுதியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. எனவே அடுத்த முறை நீங்கள் சுற்றுலா செல்லும் போது வட்டமாக உட்கார்ந்து உருளைக்கிழங்கு சாலட் சாப்பிடுவதை பற்றி இருமுறை யோசிக்க வேண்டும் என்று ஆய்வாளர் பிரையன்ட் கூறினார்.

ஈக்களால் பலவித கெடுதல்கள் இருப்பினும் இந்த ஆய்வுகளின் முடிவில் அவை மனித சமுதாயத்தில் வாழும் 'ட்ரோன்ஸ்' (drones) என்றழைக்கப்படுகின்றன. காரணம் அதன் மூலம் நோய்க்கான ஆரம்ப எச்சரிக்கை கிடைத்துவிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com