இதய நோய் வந்தால் இவ்வளவு செலவாகுமா? இதைப்பார்த்தாலே மாரடைப்பு வந்துவிடும் போலேயே!!

இதய நோய் வந்துவிட்டாலே அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை நினைத்தும் அதற்கு ஆகும் செலவை எண்ணியுமே பலரும் அதிகம் வருந்துவார்கள்.
இதய நோய் வந்தால் இவ்வளவு செலவாகுமா? இதைப்பார்த்தாலே மாரடைப்பு வந்துவிடும் போலேயே!!

இதய நோய் வந்துவிட்டாலே அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை நினைத்தும் அதற்கு ஆகும் செலவை எண்ணியுமே பலரும் அதிகம் வருந்துவார்கள். வசதி குறைந்தவர்களாக இருந்தால் சரியான மருத்துவத்தைப் பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள். இந்த அளவிற்கு இதய நோய்க்கான பரிசோதனை மற்றும் மருத்துவம் ஆடம்பர பொருளாகிவிட்ட நிலையில் சாதாரணமாக அடிப்படை பரிசோதனைகளை செய்வதற்கே எவ்வளவு செலவாகும் என்று உங்களுக்குத் தெரியுமா?

முதலில் உங்களுக்கு இதய நோய் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கவே இதய நோய்க்கென ஆரம்பக் காலம் முதலே இருக்கும் பரிசோதனைகள் முதல் புதிதாக வந்துள்ள அனைத்து விதமான சோதனைகளையும் எடுக்க வேண்டியிருக்கும். இதய நோய் வந்த பிறகு அதைச் சரி செய்ய மருத்துவத்திற்கு ஆகும் செலவைவிட பரிசோதனைகளுக்கே அதிகம் செலவாகிறது என்கிறது ஒரு ஆய்வு. உதாரணத்திற்கு நீங்கள் முதன் முதலில் இதய நோய் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள உங்கள் பகுதியில் புதிதாகத் திறந்திருக்கும் ஒரு சாதாரணமான ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதில் உங்களுக்கு இதய நோய் இருக்கிறது என்று உறுதியாகிவிட்டால் அது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என்பதை தெரிந்துக்குள்ளவே மாதம் மாதம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சுமார் ஒரு 2 வருடத்தில் நீங்கள் முதன் முதலில் பரிசோதனை செய்துகொண்ட அதே பரிசோதனை நிலையம் ஒரு பல்நோக்கு மருத்துவமனை போல் சகல வசதிகளையும் கொண்டு அந்தப் பகுதியின் ஒரு அடையாளமாகவே மாரிவிடும் அளவிற்கு வானளவு உயர்ந்து நிற்கும்.

ஒரு சாதாரண பரிசோதனை செய்துகொள்ள குறைந்தபட்சம் ரூ.2,000 முதல் ரூ.15,000 வரை செலவாகும். கோரணரி ஆசியோகிராம் என்ற சோதனையை இதய நோய் இல்லாமலேயே 7 சதவீத பேர் செய்துகொள்வதாக ஒரு மருத்துவ இதழ் வெளியிட்ட புள்ளிப் பட்டியல் விவரங்கள் சொல்கின்றன. மேற்குறிப்பிட்ட செலவுகள் இதய நோய்க்கான செலவுகள் மட்டுமே. மார்பு, எலும்பு, நரம்பு, உணவுக் குழாய் மற்றும் இரைப்பை நிபுணர், எலும்பு நோய் நிபுணர், இரைப்பைக் குடல் நிபுணர் போன்ற நிபுணர்களிடம் செல்ல வேண்டி இருக்கலாம். இவர்கள் செய்யச் சொல்லும் சோதனைகளையும் செய்ய வேண்டியிருக்கும். மூன்று ஆண்டுகளில் ரூ.1,00,000-திற்கும் அதிகமாகச் செலவு செய்த பலர் நம்மிடையே உள்ளனர். 

இதய நோய் இருக்குமோ என்கிற பயத்திலேயே பல ஆயிரங்களைப் பரிசோதனைக்காக செலவிடுகிறார்கள் மக்கள். இதுபோல் தேவையில்லாமல் செலவு செய்பவர்கள் பணம் படைத்தவர்கள் மட்டுமே என்று எண்ண வேண்டாம். கடன் வாங்கியோ, நகைகளை விற்றோ, நிலத்தையோ, வீட்டையோ அடைமானம் வைத்து செலவு செய்வதும் பெரும்பாலும் நடுத்தர வர்க்கமே. பயம் யாரை விட்டது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com