டெங்கு ஒழிப்பு தினம்: அரசு மருத்துவமனைகளில் இன்று சுகாதாரப் பணிகள்

டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் வியாழக்கிழமை சுகாதாரப் பணிகள் நடைபெற உள்ளன.

டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் வியாழக்கிழமை சுகாதாரப் பணிகள் நடைபெற உள்ளன.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கிய அம்சமாக சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக முதல்வர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 'ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகளிலும் குப்பைகளை அகற்றுதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்டச் சுகாதாரப் பணிகள் மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டது.
அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை 10 மணி முதல் சுகாதாரப் பணிகள் நடைபெற உள்ளன. அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சார்பில் ராயபுரத்தில் உள்ள செயின்ட் பீட்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுகாதாரப் பணிகள் மற்றும் பிற்பகல் 3 மணியளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதேபோன்று, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் காலை 9 மணி முதல் துப்புரவுப் பணிகள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, நிலவேம்பு குடிநீர் வழங்குதல், மருத்துவ மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com