அடிக்கடி மாரடைப்பு வருவதைப் போல் தோன்றுகிறதா? இது ஒரு மன நோய்!

அடிக்கடி மாரடைப்பு வருவதைப் போல் தோன்றுகிறதா? இது ஒரு மன நோய்!

ஆரோக்கியமான இதயம் உள்ளவர்கள் பலருக்கும் நெஞ்சில் சிறிய வலி ஏற்பட்டால் போதும் உடனே மாரடைப்போ என்கிற சந்தேகம் எழுந்துவிடும். அதிலும் குறிப்பாக வயதானவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

ஆரோக்கியமான இதயம் உள்ளவர்கள் பலருக்கும் நெஞ்சில் சிறிய வலி ஏற்பட்டால் போதும் உடனே மாரடைப்போ என்கிற சந்தேகம் எழுந்துவிடும். அதிலும் குறிப்பாக வயதானவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம், உடல் ஆரோக்கியம் குறித்த பல சந்தேகங்களும், பயங்களும் அவர்களது மனதை விட்டு நீங்காமல் அவர்களை வாட்டத் துவங்கிவிடும். இதுவும் நோய்க்கான அறிகுறி தான் ஆனால் இதய நோய் அல்ல மன நொய்க்கான அறிகுறி, மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் இந்த மனோபாவத்தில் இருந்து விடுபட்டு விடலாம். 

இந்த நோய் உள்ளவர்களுக்கு என சில அடிப்படை குணங்கள் உண்டு. இவர்களில் பெரும்பாலோர் புத்திசாலிகளாக இருப்பர். எந்தச் செயலை செய்தாலும் செவ்வனே செய்து முடிப்பார்கள். அதிக கல்வி கல்லாதவர்களாக இருந்தாலும் இவர்களின் பகுத்தறிவு மருத்துவர்களை வியக்கச் செய்யும். எவரையும் எளிதில் நம்பமாட்டார்கள். இத்தகைய குணங்களாலேயே இவர்களுக்கு ஏதாவது ஒரு இதய நோய் சம்பந்தப்பட்ட வேதனை ஏற்பட்டால் அதனை நினைத்து நினைத்து மன அமைதி இழப்பார்கள். இதனால் அவரது குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களும் கவலையுறுவர்.

இத்தகைய குணங்கள் சிலசமயம் நோயாளிகளின் தாய்வழி அல்லது தந்தைவழி ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களிடையே காணப்படும். தங்களுடைய நோயை டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற மனக்குறையுடன் இருப்பார்கள். மனநோய் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்று டாக்டர் கூறினால் அந்த டாக்டரிடம் ஆலோசனை பெறுவதையே நிறுத்தி விடுவார்கள். நோயாளியின் கணவரோ, மனைவியோ, பிள்ளைகளோ, பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ அல்லது நண்பர்களோ அவருக்கு உதவி செய்வது அவசியம். டாக்டர் சொன்னதை அடிக்கடி எடுத்துக் கூறி இதய நோய் பயத்தை நீக்கலாம். அப்படி முடியாவிட்டால் அன்பாகவும், ஆதரவாகவும் பேசி மனநல டாக்டரிடம் அவர்களை எப்படியாவது கூட்டிச் செல்ல வேண்டும்.

சின்ன சின்ன விஷயங்களையும் பெரியதாக சிந்திக்கும் கண்ணோட்டம் கொண்டவர்கள் இந்த பிரச்னையில் எளிதில் சிக்கிக் கொள்வார்கள். இதில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதை மறந்துவிடாதிர்கள். சில சமயங்களில் இந்த எண்ணமே இல்லாத இதய நோயை வரவழைத்துவிடும்.

டாக்டர் சு. வைத்தியநாதன்
MD (General Medicine), DM (Cardiology)

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இதய இயல் துறைத்தலைவராகவும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிவில் சர்ஜனாகவும், ஸ்டேன்லி மருத்துவம் கல்லூரியில் இதய நோய் துணைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com