இந்தப் பொருட்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது மிகவும் ஆபத்து!

“உங்க ஸ்கூல்ல சொல்லி தரல? ஷேரிங்!” அப்படினு பலர் சொன்னாலும் நாம் குறிப்பிட்ட ஒரு சில பொருட்களான டூத் பிரஷ், சோப், உள்ளாடைகள் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம். 
இந்தப் பொருட்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது மிகவும் ஆபத்து!

“உங்க ஸ்கூல்ல சொல்லி தரல? ஷேரிங்!” அப்படினு பலர் சொன்னாலும் நாம் குறிப்பிட்ட ஒரு சில பொருட்களான டூத் பிரஷ், சோப், உள்ளாடைகள் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம். ஆனால், அவற்றையும் தாண்டி நாம் கட்டாயம் பகிர்ந்து கொள்ளவே கூடாத சில பொருட்கள் இருக்கின்றன. இந்தப் பதிவை படித்த பிறகு உங்களுக்கும் தோன்றலாம் இதைக் கூடவா பகிர்ந்து கொள்ளாமல் தனித்தனியே உபயோகிக்க வேண்டும் என்று, ஆனால் இதைக் கடைப்பிடிப்பதாலேயே தொற்று நோய் அபாயங்களில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

இயர் ஃபோன் (Earphones):

எவ்வளவு சுத்தமானவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் காதுகளில் பேக்டீரியா கிருமிகள் இருக்கும், அதிலும் இயர் ஃபோன் உபயோகிப்பவர்களுக்கு இந்தக் கிருமிகள் உற்பத்தி சற்று அதிகமாகவே இருக்கும். எனவே நீங்கள் உங்களுடைய இயர் ஃபோனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் ஒன்று உங்களுடைய காதுகளில் இருந்த பேக்டீரியாக்கள் அவர்களது காதினுள் செல்லக்கூடும் அல்லது அவர்கள் காதில் இருக்கும் பேக்டீரியாக்கள் உங்களது காதிற்கு வந்து தொற்றை வளரச்செய்யும். மேலும் பகிர்ந்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் நீங்கள் இருந்தால் அதை திருப்பிப் பெற்ற பிறகு ஒரு துணியை ஹைட்ரஜன் பெராக்சைடில் (அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்) நினைத்து அதைச் சுத்தம் செய்த பின்னர் நீங்கள் பயன்படுத்துங்கள்.

ரோல் ஆன் டீயோடரண்டுகள் (Roll on deodrents):

ரோல் ஆன் டீயோடரண்டுகள் என்பது அக்குள் வியர்வை மற்றும் துர்நாற்றம் வீசுவதைத் தடுப்பதற்காக பயன்படுத்தப் படும் ஒன்று. இதை நீங்கள் மற்றவருக்குக் கடன் தருவதோ அல்லது கடனாக வாங்கிப் பயன்படுத்துவதோ மிகவும் அசுத்தமான ஒரு விஷயமாகும். முக்கியமாக நமது உடலில் உள்ள மிகவும் மென்மையான பகுதியான அக்குள் எளிதில் நோய் தொற்றால் பாதிக்கக் கூடிய ஒன்றாகும்.

லிப் ஸ்டிக் (Lip Stick):

பெண்கள் அதிகம் பயன் படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று லிப் ஸ்டிக். உதட்டில் ஏற்படும் வெடிப்புகளைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் லிப் பாம் (Lip Balm), உதட்டைப் பளபளப்பாக்க போடப்படும் லிப் கிளாஸ் (Lip Gloss) இவை எதையும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் எந்த ஒரு வெட்டுக் காயங்களும் இல்லாமல் ஹெர்பெஸ் எனப்படும் ஒரு வகை தொற்று எளிதில் வாய் மற்றும் எச்சில் வழியாகப் பரவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

டவல் (Towel):

நமது உடலில் இருக்கும் ஈரத்தை உரிந்தெடுப்பதே டவல் போன்ற துண்டின் பணியாகும், அப்படி உரிந்தெடுக்கப்படும் அனைத்தும் அந்த டவலிலேயே தங்கியிருக்கும், அந்த டவலை மற்றவர் பயன் படுத்தினால், அந்த டவலில் இருக்கும் கிருமிகளால் தொற்று ஏற்படக்கூடும். உதாரணத்திற்கு முகப்பருக்கள் உள்ள ஒருவர் துடைத்த டவலில் அந்தப் பருக்களில் இருந்து வெளியேறும் பால் போன்ற திரவம் இருக்கும் அந்த டவலை மற்றவர் பயன் படுத்தும் போது அந்தப் பால் போன்ற திரவம் அவரது சருமத்திலும் பட்டு முகப் பருக்களை வரவழைக்கக் கூடும்.

அழகு சாதனங்கள் (Make up things):

முகத்தைச் சுத்தம் செய்ய மற்றும் அழகு படுத்த பயன் படுத்தும் பிரஷ், ஸ்பாஞ் போன்ற பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது சரும பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். மேலும் இந்தப் பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்  குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு முறை இவற்றை மாற்ற வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com