பார்க்கின்சன் நோய்ப் பாதிப்பு: மூளையில் சிப் பொருத்தி சிகிச்சை

நடுக்கு வாத நோயால் (பார்க்கின்சன்) பாதிக்கப்பட்டவருக்கு மூளைப் பகுதியில் சிறு மின்முனைகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையில் பார்க்கின்சன் நோய்க்கு அளிக்கப்பட்ட நவீன சிகிச்சை குறித்து விளக்கும் நரம்பியல் நிபுணர் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ். உடன் டாக்டர் ராம்நாராயண்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையில் பார்க்கின்சன் நோய்க்கு அளிக்கப்பட்ட நவீன சிகிச்சை குறித்து விளக்கும் நரம்பியல் நிபுணர் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ். உடன் டாக்டர் ராம்நாராயண்.

நடுக்கு வாத நோயால் (பார்க்கின்சன்) பாதிக்கப்பட்டவருக்கு மூளைப் பகுதியில் சிறு மின்முனைகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர், சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்தார். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு இடதுபுறத்தில் நடுக்கம் ஏற்படத் தொடங்கி, அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனையடுத்து இந்தப் பிரச்னைக்கு மருந்துகள் உட்கொள்ளத் தொடங்கியுள்ளார். இருப்பினும் பிரச்னை அதிகரித்துக் கொண்டே இருந்ததால், வேலையைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சைமன் ஹெர்குலிஸ் கூறியது: 
நோயாளியை மயக்க நிலைக்கு கொண்டு செல்லாமல், விழித்த நிலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சை செய்து சிறு மின்முனைகள் அவரது மூளைப்பகுதியில் பொருத்தப்பட்டன. உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் அறிய அறுவைச் சிகிச்சையின் இடையே நோயாளியை, கை, கால்களை அசைக்கும்படியும் பேசும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். நோயாளியும் மருத்துவர்களின் அறிவுரைக்கு ஏற்ப ஒத்துழைத்தார்.
அதன் பின்பு மூளைப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிறு மின்முனைகளைச் செயல்படுத்தும் பேட்டரி அவரது நெஞ்சு சுவர் பகுதியில் பொருத்தப்பட்டது. இந்த பேட்டரியின் மூலம் மூளையில் பொருத்தப்பட்டுள்ள மின்முனைகள் இயங்கி, உடல் இயக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மூளைப் பகுதியைத் தூண்டி இயங்கச் செய்தன. இதன் காரணமாக நோயாளி குணமடைந்தார்.
இந்தியாவில் 1.1 கோடி பேர் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்தச் சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com