உங்கள் எடை அதிகரிப்புக்கு நான்-ஸ்டிக் பாத்திரங்கள் கூட காரணமாகலாம்

நமது உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள எத்தனையோ பிரயத்தனங்களை செய்தாலும், அது கட்டுக்கடங்காமல் போக எண்ணற்றக் காரணங்கள் உள்ளன.
உங்கள் எடை அதிகரிப்புக்கு நான்-ஸ்டிக் பாத்திரங்கள் கூட காரணமாகலாம்


நமது உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள எத்தனையோ பிரயத்தனங்களை செய்தாலும், அது கட்டுக்கடங்காமல் போக எண்ணற்றக் காரணங்கள் உள்ளன.

அதற்கு அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல உணவு பொருட்களும் காரணமாக இருக்கலாம். அதே சமயம், வீட்டில் சமைக்கப்படும் உணவுகளிலும் நம் கண்ணுக்குத் தெரியாத பல எதிரிகள் இருக்கலாம்.

இதற்கு ஒரு உதாரணம்தான் நான்-ஸ்டிக் பாத்திரங்கள். உடலுக்கு மிகவும் உகந்த ஒரு உணவு பொருளை நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைப்பது அல்லது பிளாஸ்டிக் காகிதம் சுத்தப்பட்ட சத்தான உணவுப் பொருளை வாங்கி சாப்பிடுவது இரண்டுமே நமது உடலுக்கு நன்மை பயக்காது.

இவற்றால், நமது உடல் எடை அதிகரிக்கச் செய்யும் என்பதோடு, உடல் எடை குறைப்புக்காக நாம் எடுக்கும் எந்த முயற்சியையும் இது நிறைவேற விடாது என்பது கூடுதல் தகவல்.

மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தும் உடல் இளைக்காத பெண்களின் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான perfluoroalkyl substances (PFAS) என்பது, நான்-ஸ்டிக் பாத்திரங்கள், உணவுப் பொருட்களை சுற்றி வரும் பிளாஸ்டிக் காகிதங்கள், பிளாஸ்டிக் பைகளில் அதிகளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு பாலரிடமும் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த PFAS காரணமாக பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com