காச நோய்க்கு மருந்து!

மக்கள் நெருக்கடியுடன் வாழும் மும்பை, டில்லி, சென்னை ஆகிய நகரங்களில் TB நோய் அதிக அளவு ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. இதற்கு ஆயுர்வேதத்தில் சிகிச்சை உள்ளதா?
காச நோய்க்கு மருந்து!

மக்கள் நெருக்கடியுடன் வாழும் மும்பை, டில்லி, சென்னை ஆகிய நகரங்களில் TB நோய் அதிக அளவு ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. இதற்கு ஆயுர்வேதத்தில் சிகிச்சை உள்ளதா?

-சுப்ர. அனந்தராமன், 
புட்டபர்த்தி.

"க்ஷதஜம்' என்றும் "க்ஷயஜம்' என்றும் இருவகை இருமலைப் (காசநோய்) பற்றிய விவரம் சரகஸம்ஹிதை எனும் நூலில் காணப்படுகிறது.  இவை இரண்டும் நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறும் TUBERCULOSIS எனும் உபாதைக்குறிய லட்சணங்களுடன் அதிகம் ஒத்து வருகின்றன. Mycobacterium tuberculosis எனும் பாக்டீரியாவால் பாதிக்கப்படும் நுரையீரலால் ஏற்படும் இந்த உபாதையில் கடும் இருமலும் காய்ச்சலும் சளியுடன் ரத்தமும், உடல்மெலிந்து போவதும் காணப்படும் எனும் நவீன ஆராய்ச்சியாளர்களின் கூற்று அனைத்தும் இந்த இருவகை காச நோயிலும் ஏற்படுவதை ஆயுர்வேதமும் கூறுகிறது. ஆனால் ஆயுர்வேதத்தில் பாக்டீரியா பற்றிய விவரம் எடுத்துரைக்கப்படவில்லை என்றாலும், இந்நோய் உருவாவதற்கான காரணங்களால், நுண்கிருமிகள் எளிதாக மனித உடலில் பற்றிவிடக் கூடிய ஆபத்தை துல்லியமாக எடுத்துக் கூறுகிறது. 

1) சாகசம் எனும் தன் சக்திக்கு மீறிய உழைப்பும் செயல்களும் 

2) வேகசந்தாரணம் எனும் இயற்கை உந்துதல்களாகிய மலம், சிறுநீர், குடல்காற்று, தும்மல், தண்ணீர் தாகம், பசி, தூக்கம், இருமல், பெருமூச்சு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி, விந்து ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அடக்குவதாலும்,

3)க்ஷயம் எனும் ரஸ - ரக்த மாம்ஸ - மேத - எலும்பு- மஜ்ஜை- விந்து ஆகியவற்றின் க்ஷீணத்தாலும்,

4)விஷமாஸனம் எனும் தப்பும் தவறுமாக உணவுகளை உண்பதாலும்-
காச நோய்க்கான விதையை மனிதர்கள் தம்முடைய உடலில் விதைத்துக் கொள்வதால், Mycobacterium tuberculosis எனும் நுண்கிருமியானது எளிதாக உள்நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. 

க்ஷதஜகாஸத்தின் ஆரம்ப நிலையில் சளி இல்லாத இருமலாக ஆரம்பித்து, பின்னர் சளியுடன் ரத்தம் கலந்த இருமலாக மாறிவிடுகிறது. தொண்டையில் கடும்வலியும், மார்பு  பிளக்கப்படுவதைப் போன்ற வேதனையும் காணும். ஊசியால் உடல் துளைக்கப்படுவது போலவும், தொட்டால் உடல் வலிதாங்க முடியாமலும், கை மற்றும் கால்விரல் பூட்டுகளில் கடும் வலியும், காய்ச்சலும், மூச்சிரைப்பும், தண்ணீர் தாகமும், குரல் கம்மலும், இருமலானது புறாவுக்குச் சமமான சத்தமுடையதாகவும்  ஏற்படும். சாகசம் எனும் முன் கூறிய காரணத்தால் இந்த உபாதை ஏற்படுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. 

 பின் கூறிய மூன்று காரணங்களால் ஏற்படும் க்ஷயஜகாஸத்தில், துர்நாற்றத்துடன் சளி, பச்சை அல்லது சிவப்பு நிறத்துடன், சீழ் போன்ற நிலையில் வெளியேறும். அதிக அளவில் உணவு சாப்பிட்டாலும், உடல்மெலிந்து, பலவீனமடையும். காய்ச்சல், ருசியின்மை, ஜலதோஷம் போன்றவையும் காணும்.

"அகஸ்தியஹரீதகீ' எனும் லேகியம் இதற்கு சிறந்த மருந்தாகும். தோல் சுருக்கம், நரைமுடி, நிறம் குறைதல் ஆகியவை குணமாகும். மேலும் ஆயுளை நீட்டி, உடல் வலுவைக் கூட்டும். காசநோய், ஆஸ்துமா, விக்கல், விட்டுவிட்டு வரும் முறைக் காய்ச்சல், மூலம், கிராணி, இதய உபாதைகள், ருசியின்மை மற்றும் மூக்கிலிருந்து ஒழுகும் ஜலதோஷம் போன்றவையும் குணமாகும். காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் பத்து கிராம் வரை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 

வியாக்ரயாதி லேகியம், சிதோபலாதி சூரணம், தாளீசபத்ராதி சூரணம், ஹரித்ரா கண்டம், வியோஷாதி வடகம், தசமூலகடுத்ரயாதி கஷாயம், பலாஜீரகாதி கஷாயம், நயோபாயம் கஷாயம், இந்துகாந்தம் எனும் நெய்மருந்து, தேகராஜாதி தைலம், தசமூலரஸாயனம், வஸிஷ்ட ரஸôயனம் எனும் லேகியம் போன்ற பல மருந்துகள் விற்பனையில் உள்ளதால், நோயாளிக்குத் தக்கவாறு இம்மருந்துகளில் 2-3 தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம்.

பசியைத் தூண்டி, உடல் வனப்பை அதிகரித்து, உட்புறக் குழாய்களைச் சுத்தப்படுத்தி உடலை வலுவூட்டும் மேற்கூறிய மருந்துகள், காச நோயாளிகளுக்குத் தரமானவை.
(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com