தடுப்பூசி மருத்துவம் : மெய்யும் பொய்யும்!

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?’ இயற்கை
தடுப்பூசி மருத்துவம் : மெய்யும் பொய்யும்!

‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?’ இயற்கை ரசனைகளில் தோய்ந்த கவித்துவத்தோடு, முத்து முத்தான கேள்விப் பூக்களை அடுக்கி அழகிய காதற்பாடலாய் தொடுத்த கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள் இவை. மருத்துவத்துறைக்குள் இதுபோன்ற ஒரு கேள்வி நீண்ட கால விவாதப் பொருளாய் விளங்கி வருகிறது. ‘கிருமி வந்தால் நோய் வந்ததா’ நோய் வந்ததால் கிருமி வந்ததா?’ இதற்கான விடையும் விளக்கமும் புரிந்து கொண்டால் மட்டுமே நோய்கள் மீதான அச்சம் அகலும், ஆரோக்கியம் பற்றிய தெளிந்த பார்வையும் உண்மையான சுயவிழிப்பும் அதிகரிக்கும்.

கிருமிகள் என்பவை நுண்ணுயிரிகள். அவை இல்லாத இடம் ஏதுமில்லை. எங்கெங்கும் நிறைந்துள்ளன. அறிவியளரிஞர்களின் கூற்றுப்படி லட்சக்கணக்கான வகைகளில் கோடானுகோடி கிருமிகள் நம்மைச் சுற்றிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கிருமிகளே நோய்களின் தாய் என்றால், தாய் தோன்றிய பிறகு தானே குழந்தை தோன்ற வேண்டும்? நேர்மாறாக குழந்தை முதலில் பிறந்து தாய் பின்னர் பிறந்தால்… அது தாயா? அல்லது குழந்தையின் மகளா?

டக்ளஸ் ஹ்யூம் (Douglas Hume) என்பவர் எழுதிய ‘Bechamp And Pasteur’ என்ற நூலில் பாஸ்டியரின் கிருமியியல் கொள்கை தவறானது என்று விஞ்ஞானரீதியாக மெய்பிக்கப்பட்ட செய்திகள் உள்ளன.

ஜான் பின் பிஃரேசர் (John B Fraser) என்ற கனடாவின் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர் லான்செட் (Canadian Lancet) என்ற மருத்துவ இதழில் 1916 ஜூன் மாதம் எழுதிய ஆய்வுக் கட்டுரை தெளிவாக உண்மைகளை உரக்கப் பேசியது. தான் கவனித்து வந்த பல கேஸ்களில் மனிதன் நோய்வாய்ப்படுகிற சமயத்தில் வழக்கமான நோய்கிருமிகள் காணப்படுவதில்லைல் என்றும், எனவே நோய் தோன்றுவதற்குக் கிருமிகள் காரணமாக இருக்க முடியாது என்றும் உறுதிபட நிறுவியுள்ளார்.

கிருமிகளில் நன்மை செய்யும் கிருமிகள் அதிகமா? தீமை செய்யும் கிருமிகள் அதிகமா? என்று நுட்பமாக ஆராய்ந்தால் நோய் பரப்பும் கிருமிகள் மிக மிகக் குறைவு என்பது தான் உண்மை. பின் ஏன் கிருமிகள் மீது இவ்வளவு பயம்? சாதாரண நோய்கள் முதல் ஆட்கொல்லி நோய்கள் வரை அனைத்து நோஒய்களுக்கும் கிருமிகளே மூல காரணம். ‘கிருமிகளின்றி நோஒய்களில்லை என்ற புனைவை மருத்துவ அறிவியலின் பெயரால் பரப்பிக் கொண்டிருக்கும் அலோபதி மருத்துவம் தான் கிருமிகள் குறித்த பயத்தின் மீது தனது அஸ்திவாரத்தைக் கட்டமைத்துள்ளது.

அலோபதியின் எல்லைகளுக்குள் அடைபடாத நோயோ, நோய்க் கிருமிகளோ இருந்தால் அது குறித்து அலோபதி மருத்துவத் துறையினர் பெரும் பீதியைக் கிளப்புவது வாடிக்கையாகி விட்டது. சில நோய்களில் அவர்களது அறிவினால், ஆராய்ச்சிக் கருவிகளால் அறிய முடியாத கிருமிகள் இருந்தால் ‘மர்மக் காய்ச்சல்’ ‘மர்ம நோய்’ என்றெல்லாம் செய்திகள் வெளி வரும். கிருமிகளின் பெயர்களோ, நோயின் பெயர்களோ இன்னும் அறியப்படாத நிலையில் அலோபதி மருத்துவம் கையறு நிலையில் தத்தளிக்கும்.

ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவங்களின் அணுகுமுறையும், சிகிச்சை முறையும் முற்றிலும் மாறானவை. நோயின் பெயர்களுக்கோ, கிருமிகளின் பெயர்களுக்கோ ஹோமியோபதியில் மருந்துகள் அளிக்கப்படுவதில்லை. ஆயினும் ஆங்கில மருத்துவத் துறை பீதி ஏற்படுத்தி வரும் பெரும்பாலான நோய்களை முறியடிக்கும் ஆற்றல் ஹோமியோபதிக்கு உள்ளது என்பதை பன்றி சுரம், பறவை சுரம், டெங்கு சுரம், சிக்குன் குனியா போன்ற பல தொற்று நோய்கள் பரவும் போது அறிய முடிகிறது.

நோய்க்கிருமிகள் குறித்த தவறான, தலைகீழான பார்வை காரணமாகவே தடுப்பூசி மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்துறை உயர்த்திப் பிடிக்கிறது. உண்மைகளை இருட்டடிப்பு செய்கிறது. 1798-ல் அம்மை குத்தும் நவீன முறையை ஜென்னர் அறிமுகம் செய்தார். 1806-ல் அம்மை ஒரு கொள்ளை நோயாகப் பரவத் தொடங்கியது. சில ஆண்டுகள் விட்டுவிட்டு கொள்ளை நோய் வடிவில் மீண்டும் மீண்டும் தாக்கியது. ஒவ்வொரு முறையும் முன்பை விடவும் பயங்கரமாகவும், கடுமையாகவும் இருந்தது. இதற்குக் காரணம் ஜென்னரின் அம்மை பால் என்பதை அன்று உணரப்படவில்லை. மாறாக கூடுதலாக அம்மை குத்தினார்கள்.

1853-ல் இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு கட்டாய அம்மை குத்தும் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு முன் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்த அம்மை நோய் அதன் பிறகு வருடம் தவறாமல் வரத் தொடங்கியது. மேலும் மேலும் அதிக உயிர்கள் கொள்ளை போயின. 1871-ல் மிகப்பெரிய கொள்ளை நோயாகப் பரவி 79 ஆயிரம் பேர் பலியாயினர். அவர்களில் ஏற்கனவே அம்மை குத்தப்பட்டவர்கள் 42 ஆயிரம் பேர். அதற்கு முன் எந்த நூற்றாண்டிலும் அந்த நோய்க்கு இவ்வளவு பேர் இரையானது இல்லை. அதிருப்தியும், வெறுப்பும் கொண்டு கிளர்ந்த மக்கள் பகுதியினரை அரசு கைது செய்து வழக்குத் தொடுத்தது. ஆயினும் மக்களின் எதிர்ப்பு வலுவானது. கட்டாய அம்மை குத்தும் சட்டத்தை மறுக்கும் இயக்கத்தின் குரல் ஓங்கி ஒலித்ததன் விளைவாக 1889-ல் ராயல் கமிஷன் அமைக்கப்பட்டது. விருப்பமில்லாதவர்கள் அம்மை குத்த வேண்டாம் என்று கமிஷன் பரிந்துரைத்தது. அம்மை குத்தும் சட்டம் பிறப்பித்த கன்சர்வேட்டிவ் கட்சி 1905-ல் வீழ்ந்தது. லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்து அரை நூற்றாண்டு காலம் அமலில் இருந்த கட்டாய அம்மை குத்தும் சட்டம் ஒழிக்கப்பட்டது. அதன் பின் தான் அம்மை நோயும் அந்த நாட்டை விட்டு ஒழியத் தொடங்கியது.

1907-ல் கட்டாய அம்மை குத்தல் கைவிடப்பட்ட பிறகு 1936 வரையிலான 30 ஆண்டுகளில் பிரிட்டனில் 100 லட்சம் குழந்தைகளுக்கு அம்மை குத்தப்பட்டது. இதில் 227 குழந்தைகள் இறந்தனர் 180 லட்சம் குழந்தைகள் அம்மை குத்தவில்லை. அவர்களில் 86 குழந்தைகள் அம்மையால் இறந்தனர். இந்த வரலாற்று உண்மை இன்றளவிலும் ஆங்கில மருத்துவத் துறையினரால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

தடுப்பூசிகளின் தந்தை டாக்டர் ஜென்னர் தனது முதல் மகனுக்கு தடுப்பூசி போட்டு மூளை பாதிக்கப்பட்டு இறந்து போன பின்பு அதிர்ச்சியடைந்து இரண்டாவது மகனுக்கு தடுப்பூசி போடவில்லை. போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த ‘ஜோன்ல்ஹால்க்’ அமெரிக்காவில் 1961-க்குப் பின் ஏற்பட்ட அனைத்துப் போலியோவிற்கும் போலியோ சொட்டு மருந்து தான் காரணம் என்று செனட் கமிட்டியில் வெளிப்படையான வாக்குமூலம் அளித்திருந்தார்.

தடுப்பூசிகளின் நச்சுத் தன்மையால் உடனடி மரண நிகழ்வுகள் (SDS – Sudden Death Syndrom) தவிர தடுப்பூசிகளால் ஏற்படும் எதிர்காலப் பின் விளைவுகள் எண்ணற்றவை. நரம்பியல் சார்ந்த ஆடிசம், புற்றுநோய், தோல் நோய், நோய் எதிர்ப்பாற்றல் அழிவு போன்ற பல உடல் நலப் பாதிப்புகள் உருவாகின்றன.

டென்மார்க் நாட்டில் தடுப்பூசி போட்டவர்களில் ஆட்டிசம் நோய் பாதித்தவர்கள் 4,40,000 தடுப்பூசி போடாத குழந்தைகளில் ஆட்டிசம் ஏற்பட்டவர்கள் 97,000. இத்தகவலை ‘Journal of American Physicians and Surgeons 2004’ என்ற நூலில் MMR and Autism in Perspective : The Denmark Story என்ற தலைப்பிலான கட்டுரையில் Dr.Canot Stott ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஹோமியோபதி கருத்துப்படி தடுப்பூசி என்பது நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமை பெற்றிராத குழந்தைகளின் உயிராற்றல் மீது நடத்தப்படும் தாக்குதலே. ஹோமியோபதியின் பார்வையில் Vaccinations என்பவை உறைந்த நோய்களே (Frozen Diseases), இவற்றின் நச்சுத் தன்மைகளால் விலை மதிப்பில்லாத இயற்கை எதிர்ப்பாற்றல் சீர் குலைக்கப்படுகிறது. தன்னைத்தானே நலப்படுத்தும் உடலின் இயல்பு பாதிக்கப்படுகிறது. தடுப்பூசி மருத்துவம் என்பது வரலாறு நெண்டுக லட்சக்கணக்கான குழந்தைகளை பலி வாங்கியுள்ளது என்பதை அறிந்த பின் எவரும் தமது குழந்தைகளோடு நடைபெறும் மரண விளையாட்டை அனுமதிக்க அஞ்சுவார்கள்.

தடுப்பூசிகளின் பின்னணியில் மருத்துவ அரசியல், பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் வணிக நோக்கம் தவிர வேறெந்த புனித நோக்கமும் இல்லை. இதற்கு செலவிடப்படும் பல்லாயிரம் கோடி தொகையை அடிப்படைத் தேவைகளான சத்தான உணவு, சுத்தமான குடிநீர், அனைவருக்கும் வேலை வாய்ப்பு தேவையெனில் ஹோமியோ, சித்தா, ஆயுர்வேத தடுப்பு மருத்துவம் என அரசுகள் செலவிட முன்வர வேண்டும். தடுப்பு மருத்துவத்தை ஏற்றுக் கொள்ளாத, மாற்றுமருத்துவங்களை கடைபிடிக்கும் மக்கள் மீது தடுப்பூசிகளை திணிப்பதை தவிர்ப்பதே ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது.

Dr.S.வெங்கடாசலம்

மாற்று மருத்துவ நிபுணர்

சாத்தூர்

Cell : 9443145700

Mail – alltmed@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com