26. செப்டம்பர் 8 - உலக பிசியோதெரபி மருத்துவர்கள் தினம்

ஒவ்வொரு நாளும் காலண்டரைக் கிழிக்கும் போது அந்த நாளுடன் நாமும் புதியதாய்
26. செப்டம்பர் 8 - உலக பிசியோதெரபி மருத்துவர்கள் தினம்

ஒவ்வொரு நாளும் காலண்டரைக் கிழிக்கும் போது அந்த நாளுடன் நாமும் புதியதாய் பிறக்கிறோம். நம் வாழ்நாளில் இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்றும் நமக்கு அந்தக் காலண்டர் உணர்த்தும். வெற்றியின் படிகள் கடினமானதே என்றாலும் வெற்றிக்குப் பிறகு நாம் சுவைக்கும் அந்த நொடிகள் மிகச் சுவையானது. அதற்காகவே பெரும்பாலான வெற்றிப் போராட்டங்கள் இவ்வுலகில் நடந்த வண்ணமேயுள்ளது.

வாழ்வின் உன்னதங்களை நாம் சில நேரம் நொடிப் பொழுதில் அலட்சியமாக கடந்து சென்று விடுகிறோம். ஆனால் ஒரு வரலாற்று வெற்றியை நாம் திரும்ப நினைத்து பார்க்கவே அந்த நாளின் வெற்றிக்கு பின்னால் உள்ள நபர்களின் போராட்டங்களை உணர்த்தவே பலரும் அறிந்து கொள்ளவே சிறப்பு தினங்கள் கொண்டாடுவது வழக்கம். மருத்துவர்கள் மனித குலத்திற்கு ஆற்றும் அளப்பரிய பணியை நினைவு கூறவும் நன்றி சொல்லவும் ஆண்டு தோறும் மார்ச் 30-ம் தேதி உலக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. போலவே, உலக பிசியோதெரபி மருத்துவர்கள் தினமும் ஆண்டுதோறும் செப்டெம்பர் 8-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நான் பணியாற்றும் துறையைப்பற்றி எழுத தொடர்ந்து வாய்ப்பை நல்கி வரும் தினமணி இணையதளத்துக்கு மனமார்ந்த நன்றியை நவில்கிறேன்.

என் கட்டுரையை தொடர்ந்து படித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இதன் மூலம் பயனடையும் என் தமிழ் சொந்தங்களுக்கும், நட்புகளுக்கும் நன்றிகள். உங்களோடு மக்களுக்காக பணியாற்றி கொண்டிருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்வதில் பிசியோதெரபி மருத்துவர்கள் மகிழ்வோம்.

வருடா வருடம் செப்டம்பர் 8-ம் தேதி உலக பிசியோதெரபி மருத்துவர்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுவதில் பிசியோதெரபி மருத்துவம் உலகிற்கு உணர்ந்தும் முக்கிய செய்தி என்னவெனில், உடல் இயக்கமே உங்களை பூமியில் நோய்கள் இல்லாமல் நெடுங்காலம் சிறப்பான வாழ்க்கை வாழ வைக்கும் இயக்கம். ஆங்கிலத்தில் movement for life என்பார்கள். இந்த மந்திரச்சொல்லை மக்களுக்கும் புரிய வைப்பதே எனது நோக்கமாகும். உடல் இயக்கம் தடைபடுவது நம் உடலில் பெரும்பாலான நோய்களுக்கு முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது. உங்கள் அலுவலக நாற்காலியில் 8 மணிநேரம் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்வது நீங்கள் ஒரு சிகரெட்டை புகைப்பதற்குச் சமம் என்கிறது ஆய்வுச் செய்தி. இதனைப் பற்றிய தெளிவான ஆய்வு விளக்கங்களோடு மற்றொரு கட்டுரையில் பதிவு செய்வேன்.

பிசியோதெரபி மருத்துவர்களின் தலைமை மையம் கனடா நாட்டில் உள்ளது, செப்டம்பர் 8-ம் தேதி உலக பிசியோதெரபி மருத்துவர்களின் பெருமன்றம் ஆரம்பிக்கபட்டதால் இந்த தினத்தையே பிசியோதெரபி மருத்துவர்கள் சமூக மக்களுக்காக பணியை செய்து வருகிறோம். இன்றளவும் பிசியோதெரபி மருத்துவர்களின் பணியை பெரும்பாலான மருத்துவர்களும் மக்களும் புரிந்து கொள்ளவே இல்லை. ஆனால் முன்பை விட தற்போது இந்நிலை மாற்றம் அடைந்துவருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

நோயாளிகள் எங்களிடம் எந்த வகையில் பயனடைகிறார்கள் என்பதை உணரத் தொடங்கிய காலம் வந்து விட்டது. இதற்குக் காரணம் மக்களும் எங்களுடன் இணைந்து செயல்படத் தொடங்கிவிட்டனர். மருத்துவர்கள் பிசியோதெரப்பிக்கு பரிந்துரைக்கும் போது அதைப் பற்றி யோசித்து முடிவு செய்து எங்களை உடனடியாக அணுகி, தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை விளக்கங்களாக பெறுகின்றனர். அதன் பின் சிகிச்சை தொடங்கியதும், அவர்கள் நல்கும் ஒத்துழைப்பின் மூலம் வலி நிவாரணம் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்புகிறார்கள். இத்தகைய நம்பிக்கையும் புரிந்துணர்வுமே நோயை விலக்கிவிடும். இது எங்கள் துறைக்கு மிகப்பெரிய வெற்றி என்றே கூறலாம்.

T. செந்தில்குமார்,

பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com