கோடையில் உங்கள் தலைமுடியையும் சருமத்தையும் பராமரிப்பது எப்படி?

வெயில் உங்கள் தலைமுடி மற்றும் சருமத்தை பாதிப்படையச் செய்துவிடும். அதிலிருந்து
கோடையில் உங்கள் தலைமுடியையும் சருமத்தையும் பராமரிப்பது எப்படி?

வெயில் உங்கள் தலைமுடி மற்றும் சருமத்தை பாதிப்படையச் செய்துவிடும். அதிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள சரும சிகிச்சை நிபுணர்களான கீதா மற்றும் சங்கீதா சில டிப்ஸ்களை பரிந்துரைக்கிறார்கள்.

தலைமுடி :

தலைமுடியை கலரிங் செய்திருந்தால் நிச்சயம் பிரச்னைதான். அடிக்கும் வெயிலில் அந்த கலரிங் நிறமிழந்து தலைமுடியை வறட்சியடையச் செய்துவிடும். உங்கள் தலைமுடியை சரி செய்ய தரமான கண்டிஷனருடன் கூடிய ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள். இது தலைமுடியை பழைய நிலைக்கு கொண்டு வர உதவும். தலையை அலசும் போது ஒவ்வொரு இழையாக எடுத்து ஷாம்பூ எல்லா இடங்களிலும் படுமாறு தடவ வேண்டும். 

ஷாம்பூவைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தரமான மாய்ஸ்ச்சர் அடங்கிய ஷாம்பூவே நல்லது. இதிலுள்ள ஹைட்ரேட்டிங் ஃபார்முலா தலைமுடியில் எங்கு கவனம் தேவைப்படுகிறதோ அங்கு ஆற்றலுடன் செயல்பட்டு தேவைப்படும் பலனை தரும்.

உங்களால் சரி செய்ய முடியாத அளவுக்கு கலரிங் திட்டு திட்டாக இருந்தால் சரும சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனை பெற்று அவர்களின் பரிந்துரையின்படி முடியை சரி செய்து கொள்ளுங்கள். தேவையென்றால் ஹேர்கட் செய்து கொள்ளுங்கள். 

சருமம் :

சருமத்தில் சுருக்கம் ஏற்பட சூரியக் கதிர் ஒரு காரணம். நீண்ட நேரம் வெயிலில் இருக்க நேர்ந்தால் SPF அளவு 25 இருக்கும்படியான சன் ஸ்க்ரீன் லோஷனை பயன்படுத்துங்கள். அது புற ஊதாக்கதிர் தாக்கத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும். சருமம் வயதான தன்மை அடைவதிலிருந்து இது காக்கும். சூரியக் கதிரால் சருமம் கருப்படைவதையும் தடுக்கும்

நாம அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சரும சிகிச்சை சாதனங்களில் மஞ்சள், சந்தனம், எலுமிச்சம் மற்றும் சிட்ரெஸ் பழங்களின் செயற்கை ரசாயனம் கலந்திருக்கலாம். அதில் தயாரிக்கப்பட்ட சோப், க்ரீம் மற்றும் பவுடர் போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் தோல் வறட்சியடையும். இவற்றில் வெயிலை அதிகப்படியாக உள்வாங்கும் தன்மை உள்ளது. அதனால் ப்ளெமிஷஸ், கரும்புள்ளிகள், கருவளையம் போன்ற பிரச்னைகள் வரலாம். தோல் மட்டுமல்லாமல் உதடும் வறட்சியடையும். சிலருக்கு உதடுகளில் வெடிப்புக்கள் வரலாம். 

அதிக அளவில் அழகு நிலைய சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதும் தோலின் இளமைத் தன்மையை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். நகத்தைச் சுற்றி க்யூட்டிகல் என்று ஒன்று இருக்கும். அது நகத்தையும் தோலையும் சேர்க்கும் பகுதி. பெடிக்யூர், மெனிக்யூர் என்று கால்கள் மற்றும் கைகளுக்கு செய்யப்படும் சிகிச்சையின் போது அழுக்குகளுடன் சேர்த்து க்யூட்டிகளையும் ஸ்ப்ரே செய்து எடுத்துவிடுவார்கள். இயற்கை அரணாக பாக்டீரியா மற்றும் பங்கஸ் போன்ற கிருமிகளிலிருந்து காப்பாற்றும் இதனை இழந்துவிடுவதால் நோய்த்தொற்று  நகத்துள் புகும் தன்மையை ஏற்படுத்திவிடும்

சரும சிகிச்சை பொருட்களை தேர்ந்தெடுக்கும் போதும் கவனமாக செயல்பட வேண்டும். கெமிக்கல் அதிகமில்லாத சோப்புகளையும் ஷாம்பூக்களையும் பயன்படுத்தவேண்டும். புற ஊதாக் கதிரிலிருந்து தற்காத்துக் கொள்ள அதற்கேற்ற க்ரீம்களை பயன்படுத்தலாம். நம் ஊரில் கிடைக்கும் அழகுச் சாதனப்பொருட்கள் நம் இந்திய தோலுக்குரிய வகையில் தயாரிக்கப்படுவதால் அதனையே பயன்படுத்தலாம். வெளிநாட்டிலிருந்து காஸ்ட்லியான இறக்குமதி செய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் அவர்களின் சரும வகைகளான ஸ்டின் டைப் 1, 2 மற்றும் 3 க்கு என தயார் செய்யப்படுகிறது. இந்தியர்களின் சரும வகை டைப் 4 மற்றும் 5. எனவே நம் நாட்டு தட்ப வெப்பத்துக்கு ஏற்றபடி தயாரிக்கப்படும் பொருட்களை மட்டும் பயன்படுத்துவதால் தோல் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

வறட்சியான தோல் உடையவர்கள் குளித்ததும் கட்டாயம் நல்ல தரமான மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். (பருக்கள் அல்லது எண்ணெப் பசை சருமம் கொண்டவர்கள் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்தக் கூடாது).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com