உ.பி. தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கத் தயக்கமில்லை

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்குத் சமாஜவாதி கட்சிக்கு தயக்கமில்லை என்று அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
உ.பி. தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கத் தயக்கமில்லை

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்குத் சமாஜவாதி கட்சிக்கு தயக்கமில்லை என்று அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
அப்படியொரு கூட்டணி அமைந்தால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில், 300 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும் அவர் கூறினார்.
தேர்தலுக்கு முன்பு எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று சமாஜவாதிக் கட்சியின் தலைவரும், அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங் யாதவ், கடந்த மாதம் திட்டவட்டமாகக் கூறிய நிலையில், அகிலேஷ் யாதவ் இவ்வாறு கூறியுள்ளார். தில்லியில் "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' ஆங்கில நாளிதழ் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துப் பேசினார். அவர் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலுக்கு முன்பே, முதல்வர் பதவி வேட்பாளராக, முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. அந்தக் கட்சியின் தேர்தல் உத்தி ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் முலாயம் சிங்கையும், என்னையும் சந்தித்துப் பேசினார்.
ஒருவேளை சமாஜவாதிக் கட்சியுடன் யாரேனும் கூட்டணி அமைக்க விரும்பினால், அவர்களுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதிக் கட்சி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், எங்களுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தால், 300 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இதை, தேர்தல் உத்தி ஆலோசகர் பிரசாந்த் கிஷோரிடமும் தெரிவித்துவிட்டேன். எனினும், தேர்தல் கூட்டணி குறித்த இறுதி முடிவை கட்சியின் தலைவர் முலாயம் சிங்கே எடுப்பார்.
ஆனால், எக்காரணத்தைக் கொண்டும், இதற்கு முன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மூன்று முறை ஆட்சியமைத்த பஜகுன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்.
ரூபாய் நோட்டு விவகாரத்தால், நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்துவிட்டது. பிரதமர் மோடி தனக்கு வாக்களித்த மக்களை, வங்கி வாசல்களில் காத்திருக்க வைப்பதுதான், அவர் கூறிய நன்னாளா? என்றார் அகிலேஷ் யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com