"ஜன் தன்' வங்கிக் கணக்குகளில் ரூ.1.64 கோடி கருப்புப் பணம்

ஏழை மக்களுக்கு மத்திய அரசால் தொடக்கிக் கொடுக்கப்பட்ட "ஜன் தன்' வங்கிக் கணக்குகளில் ரூ.1.64 கோடி கருப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு மத்திய அரசால் தொடக்கிக் கொடுக்கப்பட்ட "ஜன் தன்' வங்கிக் கணக்குகளில் ரூ.1.64 கோடி கருப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றில், ஒரு வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.40 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தொகையை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததற்குப் பிறகு கருப்புப் பணத்தை மாற்றுவதற்காக பல்வேறு வழிகளை சிலர் கையாண்டு வருகின்றனர். அத்தகைய முயற்சிகளுக்கு மத்திய அரசு அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது "ஜன் தன்' வங்கிக் கணக்குகளில் கருப்புப் பணத்தை டெபாசிட் செய்து பரவலாக மாற்றுவதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கணக்குகளின் பரிவர்த்தனைகளை வருமான வரித் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, மிதுனாப்பூர், பிகார் மாநிலம் ஆரா, கேரளத்தின் கொச்சி, உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிலரது "ஜன் தன்' கணக்குகளில் சந்தேகத்துக்குரிய வகையில் மொத்தம் ரூ.1.64 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
உரிய ஆதாரங்கள் எதுவுமில்லாததால் அவை கருப்புப் பணம் என்பதை வருமான வரித் துறையினர் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு "ஜன் தன்' வங்கிக் கணக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com