நீதிமன்றங்களில் தேசிய கீதம் இசைக்க கோரி மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

திரையரங்குகளைத் தொடர்ந்து, நீதிமன்றங்களிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவதைக் கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திரையரங்குகளைத் தொடர்ந்து, நீதிமன்றங்களிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவதைக் கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 திரையங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்நிலையில் அதுபோன்ற நடைமுறையை நீதிமன்றங்களிலும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக மூத்த தலைவரும், வழக்குரைஞருமான அஸ்வனிகுமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "நீதிமன்றத்தின் குறிப்பிட்ட ஓர் உத்தரவை அனைத்து இடங்களிலும் பொருத்திப் பார்க்கக் கூடாது; எனவே, இத்தகைய மனுக்களை விசாரணைக்கு உகந்ததாக எடுத்துக் கொள்ள முடியாது' என்று தெரிவித்து உபாத்யாயவின் மனுவை நிராகரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com