சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றிய 4 வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்

பழைய ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமான முறையில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிய 4 வங்கி ஊழியர்களை வேலை விட்டு நீக்கியுள்ளதாக, ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமான முறையில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிய 4 வங்கி ஊழியர்களை வேலை விட்டு நீக்கியுள்ளதாக, ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் சார்பில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்மையில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் மின்னணுப் பதிவுகளில் முறைகேடு நடைபெற்றது தெரிய வந்ததை அடுத்து, அதுதொடர்பாக உள்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், சண்டீகரின் சர்வீஸ்-15 கிளையைச் சேர்ந்த 4 ஊழியர்கள், பழைய ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமான முறையில் மாற்றியிருப்பது தெரியவந்தது.
அந்த ஊழியர்களில் ஒருவருக்குத் தெரிந்த நபர், அதிக அளவில் ரொக்கமாக இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, மற்ற 3 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்தத் தகவல் தெரிய வந்ததை அடுத்து, அந்த 4 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பஞ்சாப் மாநிலம், பதிண்டாவில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பணம் வசூலித்ததாக, அந்த வங்கியின் மேலாளரையும் காசாளரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com