மேற்கு வங்க சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள்: இதில் என்ன சதி?: மம்தாவுக்கு வெங்கய்ய நாயுடு கண்டனம்

மேற்கு வங்க சுங்கச்சாவடிகளில் ராணுவம் பணியில் ஈடுபட்டது தனது ஆட்சியைக் கவிழ்க்க நடைபெற்ற சதி என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கண்டனம் தெரிவித்து
மேற்கு வங்க சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள்: இதில் என்ன சதி?: மம்தாவுக்கு வெங்கய்ய நாயுடு கண்டனம்

மேற்கு வங்க சுங்கச்சாவடிகளில் ராணுவம் பணியில் ஈடுபட்டது தனது ஆட்சியைக் கவிழ்க்க நடைபெற்ற சதி என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு
கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு இடையே வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் என்ன சதி இருக்கிறது? ராணுவத்தை ஒருசர்ச்சைக்குள் இழுத்து விடுவது என்பது தேசத்தின் நலன்களுக்கு உகந்ததல்ல. அதை யார் செய்தாலும் கண்டிக்கத்தக்கதுதான்.
இந்த விவகாரத்தில் முழு உண்மையையும் தெரிந்து கொள்ளாமல் திரிணமூல் காங்கிரஸ் மட்டுமன்றி காங்கிரஸ் உள்ளிட்ட வேறு சிலரும் இதைப் பெரிய பிரச்னையாக்க முயற்சிக்கின்றனர். கடைசியில் என்ன நடந்தது? அது அவர்களுக்கு எதிராகவே திரும்பியது. தேசத்தின் பெருமிதமான ராணுவத்தை யாரும் சர்ச்சைகளுக்கு உட்படுத்த வேண்டாம்.
ஆண்டுதோறும் சுங்கச்சாவடிகளில் ராணுவம் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கமான நடைமுறைதான். இந்த ஆண்டும் அவ்வாறு உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், மணிப்பூர், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இது நடந்துள்ளது. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மேற்கு வங்கத்தில் நடைபெற்றது.
இதில் புதிதாக எதுவும் இல்லை. இது ராணுவத்தைக் குவிப்பது, ஆட்சிக் கவிழ்ப்பு சதி என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் (திரிணமூல் உள்ளிட்ட கட்சியினர்) தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்புக்குத் தட்டுப்பாடு, தங்கம் பறிமுதல் செய்யப்பட உள்ளது, ராணுவத்தைக் கொண்டுவந்து அவசரநிலை கொண்டுவரப்பட உள்ளது என்பது போல் பல்வேறு விவகாரங்களிலும் தவறான பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் உள்பட எந்த விவகாரத்திலும் தவறான தகவல்களை யாரும் பரப்பக் கூடாது. அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருவது உண்மைதான்.
ஒரு மாற்றம் நடைபெறும்போது ஆரம்பத்தில் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். அதனால்தான் நீண்டகாலப் பயன்களுக்காக தாற்காலிக வலிகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். அதனால்தான் "எனக்கு 50 நாள் கொடுங்கள்' என்று பிரதமர், மக்களிடம் கேட்டுள்ளார் என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com