வங்கிகளில் செலுத்தப்படுவதாலேயே கருப்புப் பணம் வெள்ளையாகி விடாது: அருண் ஜேட்லி

வங்கிகளில் செலுத்தப்படுவதாலேயே கருப்புப் பணத்தை ஒருவர் வெள்ளையாக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எச்சரித்தார்.
வங்கிகளில் செலுத்தப்படுவதாலேயே கருப்புப் பணம் வெள்ளையாகி விடாது: அருண் ஜேட்லி

வங்கிகளில் செலுத்தப்படுவதாலேயே கருப்புப் பணத்தை ஒருவர் வெள்ளையாக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எச்சரித்தார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
கணக்கில் வராத பணத்தை வங்கிகளில் செலுத்தினால் மட்டும் அந்தப் பணத்தை சட்டப்பூர்வமானதாக மாற்றிவிட முடியாது.
அந்தப் பணத்துக்கு வரி செலுத்த வேண்டும். வங்கிகளில் செலுத்தப்படும் அதிக மதிப்பிலான ரொக்கத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
புதிய ரூ.500 தாள்களின் விநியோகத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. தற்போது நிலவிவரும் சூழல் விரைவில் சரியாகிவிடும் என்றார் அருண் ஜேட்லி.
பெருமதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் அவர் தில்லியில் சனிக்கிழமை கந்தாலோசனை நடத்தினார்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 27-ஆம் தேதி வரை ரூ.8.45 லட்சம் கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com