மோடியின் ரூபாய் நோட்டு வாபஸ் முடிவால் மக்கள் யாசகர்களாகி விட்டனர்: மாயாவதி

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பின் மூலம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் யாசகர்களாக மாறிவிட்டனர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
மோடியின் ரூபாய் நோட்டு வாபஸ் முடிவால் மக்கள் யாசகர்களாகி விட்டனர்: மாயாவதி

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பின் மூலம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் யாசகர்களாக மாறிவிட்டனர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாதில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில் பேசியபோது, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை எதிர்க்கும் மாயாவதி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சித்தார்.
"எனது அரசியல் எதிரிகளால் என்னை என்ன செய்துவிட முடியும்? நான் ஒரு யாசகன்' என்று அவர் பேசினார்.
இந்நிலையில், லக்னௌவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்பேத்கரின் 61-ஆவது நினைவுதின நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்றார். அப்போது பிரதமரின் கருத்தை விமர்சித்து அவர் பேசியதாவது:
மோடி இன்னமும் யாகசகரராக மாறிவிடவில்லை. ஆனால் நாட்டின் 90 சதவீத மக்களை அவர் யாசகர்களாக்கி விட்டார். அவர் எடுத்த ரூபாய் நோட்டு வாபஸ் முடிவானது சாமானிய மனிதனை திவாலாக்கி விட்டது.
இந்த முடிவானது மக்களுக்கு மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விட்டது. அவர்கள் உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பது மட்டுமின்றி இத்தேர்தலில் அக்கட்சி நான்காவது இடத்தை (கடைசி இடம்) பெறுவதையும் உறுதிப்படுத்துவார்கள். மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கே இங்குமங்கும் அலைய வைக்கப்பட்டது கேலிக்கூத்தானது.
பகுஜன் சமாஜ் கட்சியானது கருப்புப் பணத்துக்கும் ஊழலுக்கும் எதிரானது அல்ல. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன்பு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததையே எங்கள் கட்சி ஆட்சேபிக்கிறது.
ஹிந்துத்துவத்தின் அடிப்படையில் சமூகத்தைப் பிளவுபடுத்த பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சி மேற்கொள்கின்றன. ஏனெனில், அவர்களுக்கு அம்பேத்கர் வகுத்தளித்த மதச்சார்பற்ற அரசியல்சாசனம் மீது நம்பிக்கை இல்லை. எனவே மக்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் மாயாவதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com