சிம்மஹஸ்த கும்பமேளா ஏற்பாடுகளில் ஊழல்? எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ம.பி. சட்டப் பேரவை ஒத்திவைப்பு

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் நடைபெற்ற சிம்மஹஸ்த கும்பமேளா திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி சிம்மஹஸ்த கும்பமேளா திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடைபெற்றதாக மாநில சட்டப் பேரவையில் வியாழக்கிழமை குற்றம்சாட்டி, அமளியில் ஈடுபட்ட பிறகு அவையில் இருந்து வெளிநடப்பு செய
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி சிம்மஹஸ்த கும்பமேளா திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடைபெற்றதாக மாநில சட்டப் பேரவையில் வியாழக்கிழமை குற்றம்சாட்டி, அமளியில் ஈடுபட்ட பிறகு அவையில் இருந்து வெளிநடப்பு செய

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் நடைபெற்ற சிம்மஹஸ்த கும்பமேளா திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, அந்த மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
உஜ்ஜைனி நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரபலமான சிம்மஹஸ்த கும்பமேளா ஒரு மாத காலத்துக்கு நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் பங்கேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவர். இதன்படி சிம்மஹஸ்த கும்பமேளா கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ததில் மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு பெருமளவில் ஊழல் புரிந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தை அக்கட்சி எம்எல்ஏ ஜித்து பட்வாரி மாநில சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது எழுப்பினார்.
அவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாற்காலிக எதிர்க்கட்சித் தலைவரான பாலா பச்சன் உள்ளிட்ட எம்எல்ஏக்களும் இந்த விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கோரி நோட்டீஸ் அளித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த எம்எல்ஏக்கள் அடங்கிய கூட்டுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
சிம்மஹஸ்த கும்பமேளா ஏற்பாடுகள் தொடர்பான நிதி ஒதுக்கீடு மற்றும் அதற்கு செய்யப்பட்ட செலவு ஆகியவை தொடர்பாக மாநில அரசு மாறுபட்ட கணக்கு-வழக்குகளை அளித்திருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினர். இதுவே இந்த விவகாரத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதை உணர்த்துவதாகவும் தெரிவித்து அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஜித்து பட்வாரி பேசுகையில், "சட்டப் பேரவையின் முந்தைய கூட்டத்தொடரில், சிம்மஹஸ்த கும்பமேளாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2771.65 கோடி என்றும் அதற்கு செலவழிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.2,000.93 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், இது தொடர்பான எனது கேள்விக்கு அவையில் தற்போது அளிக்கப்பட்ட பதிலில் கும்பமேளாவுக்கு ரூ.2,344.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும், ரூ.2,150.63 கோடி செலவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கணக்கு-வழக்கில் முரண்பாடு காணப்படுகிறது' என்று குறைகூறினார்.
இந்த விவகாரத்துக்கு பதிலளித்து மாநில உள்துறை அமைச்சரும், கும்பமேளா ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாளருமான பூபேந்திர சிங் கூறுகையில், "அமளியில் ஈடுபடுவதற்குப் பதிலாக, கும்பமேளாவில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால் அதை எதிர்க்கட்சிகள் அவையில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
எனினும், இதை ஏற்காமல் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கும்பமேளா விழா ஏற்பாடுகள் குறித்து விவாதம் நடத்தக் கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதை அவைத்தலைவர் ஏற்காததால் அவையின் மையப்பகுதியில் குவிந்து அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அவையை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்
அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com