பான் மசாலா விளம்பரத்தில் நானா ? 'ஜேம்ஸ் பாண்ட்' பியர்ஸ் பிராஸ்னன் வேதனை!

இந்திய பான் மசாலா விளம்பரம் ஒன்றில் தான் இடம்பெற்றது மிகுந்த வேதனையை உண்டாக்கியதாக, 'ஜேம்ஸ் பாண்ட்' பட நாயகன் பியர்ஸ் பிராஸ்னன் தெரிவித்துள்ளார்.
பான் மசாலா விளம்பரத்தில் நானா ? 'ஜேம்ஸ் பாண்ட்' பியர்ஸ் பிராஸ்னன் வேதனை!

புதுதில்லி: இந்திய பான் மசாலா விளம்பரம் ஒன்றில் தான் இடம்பெற்றது மிகுந்த வேதனையை உண்டாக்கியதாக, 'ஜேம்ஸ் பாண்ட்' பட நாயகன் பியர்ஸ் பிராஸ்னன் தெரிவித்துள்ளார்.

'கோல்டன் ஐ', 'டுமாரோ நெவர் டைஸ்', ' தி வேர்ல்ட் இஸ் நாட் எனாஃப்', 'டை அனதர் டே' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் 'ஜேம்ஸ்பாண்ட் 007' கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றவர் பியர்ஸ் பிராஸ்னன்.

சமீபத்தில் ஒரு இந்திய நிறுவனத்தின் பான் மசாலா டப்பாவை பிராஸ்னன் கையில் பிடித்தபடி காட்சி தரும் விளம்பரமானது இந்திய பத்திரிக்கைகளில் வெளியானது. அந்த விளம்பரத்தில் பான் மசாலாவை விளம்பரப் படுத்தும் வார்த்தைகளுடன் பிராஸ்னன் கையெழுத்தும் காணப்பட்டது. டி.வி. சேனல்களிலும்  இந்த விளம்பரம் வெளியானது. அதன் விளைவாக சமூக வலைதளங்களில் 'வைரல்' ஆனதுதான், ப்ராஸ்னனுக்கு எதிரான விமர்சனங்களும் தலை தூக்கின.

இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகைக்கு ஒன்றுக்கு பியர்ஸ் பிராஸ்னன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

"புற்றுநோய் ஏற்படுத்தும் பான் மசாலா விளம்பரத்தில் நான் நடித்திருப்பது என்னை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

என்னை இந்த விளம்பரத்தில் சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும், பற்களை பளப்பளப்பாக்கும் என்று கூறிதான் நடிக்க வைத்தனர். ஆனால் நான் நடித்த பான் மசாலா விளம்பரம் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்று அறிந்ததும் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

புற்றுநோயால் நான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது முதல் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என பலரை புற்றுநோய்க்கு பறிகொடுத்துள்ளேன்.

எனது புகைப்படத்தை பான் மசாலா விளம்பரத்திலிருந்து நீக்குமாறு சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பான் மசாலா விளம்பரத்தில் நடித்தற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com