‘பாக். நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமா? பாலிவுட் திரையுலகம் பரிசீலிக்க வேண்டும்!'

இந்தியத் திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமா? என்பது குறித்து பாலிவுட் திரையுலகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்
‘பாக். நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமா? பாலிவுட் திரையுலகம் பரிசீலிக்க வேண்டும்!'

இந்தியத் திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமா? என்பது குறித்து பாலிவுட் திரையுலகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெலங்கான ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி எம்.பி.யான கே.கவிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெலங்கானா மாநிலம், நிஜாமாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது:

பாகிஸ்தான் தொடர்ந்து நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தக் குழப்பமான நேரத்தில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை நம் நாட்டு விளையாட்டுத்துறை பிரபலங்கள் புறக்கணித்து வருகின்றனர். எனவே இது தொடர்பாக நாமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாகிஸ்தான் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது தேவையா? என்பதை பாலிவுட் திரையுலகமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நேபாளம் போன்ற மற்ற நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு இங்கு எதிர்ப்பு இல்லை. பாகிஸ்தான் கலைஞர்களுக்கு அரசியல் கட்சிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்பதை பாலிவுட் திரையுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் கவிதா.

பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர் ஃபவாத் கான் நடித்துள்ள "ஏ தில் ஹை முஷ்கில்' என்ற பாலிவுட் திரைப்படத்தை வெளியிட மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கவிதா மேற்கண்ட கருத்தைக் கூறியுள்ளார். பாகிஸ்தான் கலைஞர்கள் பங்குபெறும் எந்தத் திரைப்படத்தையும் இந்தியாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com