ஹைதராபாதில் இன்று தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் செயற்குழுக் கூட்டம்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
தொடக்க விழாவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, முக்கிய விவகாரங்கள் தொடர்பாக நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிய
வுள்ளார்.
பொது சிவில் சட்டத்தை அமலாக்குவது, "தலாக்' விவகாரத்து முறையை ரத்து செய்வது என பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கூட்டத்தின் இறுதி நாளில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்புப் பிரிவின் தலைவர் மன்மோகன் வைத்யா தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்து 65,000-க்கும் மேற்பட்டோர் இணையவழியில் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகம் என்றும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com