ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையில் கேரள முதல்வருக்குத் தொடர்பா? புதிய குற்றச்சாட்டால் பரபரப்பு

ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாதில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களாவன:
கேரளத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் உடனடியாக மாநில அரசும், மத்திய அரசும் தலையிட வேண்டும்.
வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கேரளத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வன்முறை அரசியலுக்கு எதிராக மக்களிடம் ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு அந்த அமைப்பின் ஊடகப் பிரிவு இணை அமைப்பாளர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீதான தாக்குதலானது 1942-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 1969-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகியாக கருதப்பட்ட ராமகிருஷ்ணன் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக பி.விஜயன் என்ற 20 வயது இளைஞர் சேர்க்கப்பட்டார். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கு மேற்கொண்டு நடத்தப்படவில்லை.
இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பி.விஜயன் என்பவர்தான் தற்போது கேரள மாநிலத்தின் முதல்வராக இருக்கும் பினராயி விஜயன் ஆவார் என்றார் நந்தகுமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com