காஷ்மீர்: 100-ஆவது நாளை எட்டியது பண்டிட் தொழிலாளர்களின் போராட்டம்

காஷ்மீர் பள்ளத்தாக்கில், வன்முறையாளர்கள் தங்களைத் தாக்கியதைக் கண்டித்து பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்

காஷ்மீர் பள்ளத்தாக்கில், வன்முறையாளர்கள் தங்களைத் தாக்கியதைக் கண்டித்து பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம், திங்கள்கிழமை 100-ஆவது நாளை எட்டியது.
இதுகுறித்து அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ரூபன் சப்ரூ, ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஸ்ரீநகரில் உள்ள தாற்காலிக முகாம்கள் மீது நாங்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம், திங்கள்கிழமையுடன் 100 நாள்கள் நிறைவடைந்தது. எங்களது சம்பளம் ஜூலை மாதத்தில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, எங்களது சம்பளத்தை அரசு வழங்க வேண்டும் என்றார் ரூபன் சப்ரூ.
முன்னதாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹான் வானியை சுட்டுக் கொன்றதைக் கண்டித்து, ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பண்டிட்டுகளின் தாற்காலிக முகாம்களின் மீது வன்முறையாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பிரதமரின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் 1,500-க்கும் மேற்பட்ட பண்டிட் தொழிலாளர்கள், பாதுகாப்பு கருதி ஜம்முவுக்குத் தஞ்சம் புகுந்தனர்.
இதனிடையே, காஷ்மீர் பண்டிட் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவதற்கான சூழல் இன்னும் ஏற்படவில்லை என்றும், ஒட்டுமொத்த பண்டிட்டுகளும் பள்ளத்தாக்குக்குத் திரும்பும்போதுதான் தொழிலாளர்களும் பணிக்குத் திரும்புவார்கள் என்றும் அனைத்துத் தரப்பு புலம்பெயர்ந்தோர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் வினோத் பண்டிட் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com