இந்திய தூதரக அதிகாரி மீதான நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்

இந்தியத் தூதரக அதிகாரி சுர்ஜீத் சிங், பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதற்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்திய தூதரக அதிகாரி மீதான நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்


புது தில்லி: இந்தியத் தூதரக அதிகாரி சுர்ஜீத் சிங், பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதற்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றும் சுர்ஜீத் சிங்கை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுவதற்கு எந்த அடிப்படை ஆதாரத்தையும் பாகிஸ்தான் கொடுக்கவில்லை.

பாகிஸ்தானின் இந்த செயல், இந்தியாவுக்கு எதிராக தான் செய்து வரும்  - எல்லையில் அத்துமீறில்- உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் ஒப்புக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியப் பாதுகாப்புத் தொடர்பான முக்கிய தகவல்களை உளவு பார்த்ததாக மொஹமூத் அக்தர் என்ற பாகிஸ்தான் தூதரக அதகாரிகளை தில்லி குற்றப்பிரிவு போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

இதன் எதிரொலியாக, இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com