நீதிபதிகள் பற்றாக்குறையால் நீதி மறுக்கப்படும் சூழ்நிலை

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பற்றாக்குறையால் அச்சுறுத்தலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சட்டத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரும்,
நீதிபதிகள் பற்றாக்குறையால் நீதி மறுக்கப்படும் சூழ்நிலை

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பற்றாக்குறையால் அச்சுறுத்தலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சட்டத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் நியமன நடைமுறைகள் தாமதமாகி வருவதைக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா? என்ற கேள்வி எழுப்பியுள்ள நிலையில் ஆனந்த் சர்மா இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனால் மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்னை மிகவும் கவலையளிப்பதாகவும், அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
இது தொடர்பாக சட்டத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கவலை தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக பதிலளித்தாக வேண்டும் என்றார் ஆனந்த் சர்மா.
சமீபத்தில் தகவலின்படி நாட்டில் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 450 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் 5,111 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com