காவிரி விவகாரம்: கர்நாடக பேரவையின் தீர்மானம் அரசமைப்புச் சட்டத்தை மீறுகிறது

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அரசமைப்பு சட்ட விதிகளை மீறும் வகையில் இருப்பதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி தெரிவித்தார்.
காவிரி விவகாரம்: கர்நாடக பேரவையின் தீர்மானம் அரசமைப்புச் சட்டத்தை மீறுகிறது

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அரசமைப்பு சட்ட விதிகளை மீறும் வகையில் இருப்பதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அரசமைப்புச் சட்ட விதி எண் 144-இன் கீழ், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அரசு நிர்வாகம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன்படி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் அந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை, அரசமைப்புச் சட்ட விதிகளை மீறும் செயலாகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கர்நாடக அரசு முடிவெடுக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு ஆய்வு செய்யவும் முடியாது. அரசு நிர்வாகமே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்றா விட்டால், நாட்டில் அது மிகவும் மோசமான முன்னூதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றார் ஏ.கே. கங்குலி.
காவிரி நீரை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ளும்படி, கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், காவிரியில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கர்நாடக பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷட்டர் (பாஜக), ஜனதா தளம் மூத்த தலைவர் ஒய்.எஸ்.வி. தத்தா ஆகியோரால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com