ஜிஎஸ்டி கவுன்சிலின் கூடுதல் செயலராக அருண் கோயல் நியமனம்

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டக் கவுன்சிலின் கூடுதல் செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டார்.

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டக் கவுன்சிலின் கூடுதல் செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டார்.
அடுத்த ஆண்டு அமலுக்கு வரவுள்ள சரக்கு, சேவை வரிச் சட்டத்தின் கீழ் வரி விதிப்புக்கு உட்படுத்த வேண்டிய பொருள்கள், வரிவிலக்கு அளிக்க வேண்டிய பொருள்கள் உள்ளிட்டவை குறித்து முடிவு செய்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கவுன்சில் அண்மையில் அமைக்கப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் தலைமையின் கீழ் இயங்கும் இந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் வருவாய்த்துறை இணையமைச்சர், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள் அல்லது மாநில அரசுகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் கூடுதல் செயலராக அருண் கோயலை நியமிப்பதற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தக் குழுவின் கூடுதல் செயலராக அருண் கோயலை நியமிப்பதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் சனிக்கிழமை பிறப்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com