காவிரிப் பிரச்னை: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் புதிய மனு

கர்நாடகத்தில் பருவ மழை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதால், தண்ணீர் திறப்பைத் தள்ளி வைக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை புதிய மனுவைத் தாக்கல் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

கர்நாடகத்தில் பருவ மழை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதால், தண்ணீர் திறப்பைத் தள்ளி வைக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை புதிய மனுவைத் தாக்கல் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
கர்நாடகத்தில் பருவ மழை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதால், அங்குள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பும் வரை தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடுவதை ஒத்திவைக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை திங்கள்கிழமை தாக்கல் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கர்நாடக அரசின் வழக்குரைஞர் எஃப்.எஸ். நாரிமன் தலைமையிலான சட்ட நிபுணர்களுடன் மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, கடந்த 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு 6,000 கன அடி காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்தத் தீர்ப்பை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com