உமாபாரதி தலைமையில் தமிழக, கர்நாடக அமைச்சர்கள் கூட்டம்

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்கு தில்லியில் கர்நாடக, தமிழக அமைச்சர்களின் கூட்டத்தை மத்திய நீர்வளங்கள் துறை அமைச்சர் உமாபாரதி வியாழக்கிழமை (செப்.24) கூட்டியுள்ளார்.
உமாபாரதி தலைமையில் தமிழக, கர்நாடக அமைச்சர்கள் கூட்டம்

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்கு தில்லியில் கர்நாடக, தமிழக அமைச்சர்களின் கூட்டத்தை மத்திய நீர்வளங்கள் துறை அமைச்சர் உமாபாரதி வியாழக்கிழமை (செப்.24) கூட்டியுள்ளார்.
இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரித்தபோது, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம், இரு மாநில அரசு நிர்வாகத் தலைவர்கள் அடுத்த 2 நாள்களில் சந்தித்துப் பேசுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது.
அதன்படி, காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு கர்நாடக, தமிழக அமைச்சர்களின் கூட்டத்தை மத்திய நீர்வளங்கள் துறை அமைச்சர் உமாபாரதி வியாழக்கிழமை கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்து கொள்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து மத்திய நீர்வளங்கள் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சமீர் சின்ஹா, சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "தில்லியில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக நடைபெறவுள்ள கர்நாடகா முதல்வர், தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் இடையேயான கூட்டத்துக்கு உமாபாரதி தலைமை வகிப்பார். இக்கூட்டத்தில் இரு மாநிலங்களின் நீர்வளத்துறை அமைச்சர்கள், தலைமைச் செயலர்கள் ஆகியோரும் பங்கேற்பார்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com