பெண்ணாக இருந்து ஆணாக மாறிய வாலிபர்; மனைவியிடம் 'விவாகரத்து' கோரி வழக்கு: சிக்கலில் நீதிமன்றம்!

பெண்ணாக இருந்து பாலியல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய வாலிபர் ஒருவர், தற்பொழுது தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி ..
பெண்ணாக இருந்து ஆணாக மாறிய வாலிபர்; மனைவியிடம் 'விவாகரத்து' கோரி வழக்கு: சிக்கலில் நீதிமன்றம்!

மும்பை: பெண்ணாக இருந்து பாலியல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய வாலிபர் ஒருவர், தற்பொழுது தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மும்பையைச் சேர்ந்த 31 வயது தொழில் அதிபர் ஒருவர் சமீபத்தில் தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி பாந்த்ரா நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அதற்கு அவர் குறிப்பிட்டிருந்த காரணம்தான் நீதிமன்றத்தை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. 

அந்த வாலிபர் தான் முதலில் பெண்ணாக இருந்தவர் என்றும், பின்னர் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறியதாக தெரிவித்தார். தன்னுடன் அதற்கு முன் 11 வருடங்கள் தோழியாக இருந்த ஒரு பெண்ணைத்தான் கடந்த டிசம்பர் 2015 ஆம் ஆண்டு, தான் இந்து திருமண முறைப்படி மணம் புரிந்து கொண்டதாக தெரிவித்தார்.அத்துடன் அவரது மனைவியாக உள்ள அந்த பெண்தான், இது போன்ற பாலியல் மாற்று சிகிச்சை செய்து கொண்டால் மட்டுமே, தன்னை அவரகள் வீட்டில் அவளது ஆண் நண்பராக அறிமுகம் செய்ய முடியும் என்று கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் அவளது ஆடை வடிவமைப்பு படிப்பிற்கான முழு தொகையையும் தான்தான் செலவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

குறிப்பிட்ட அந்த சிகிச்சை நடைபெறும் பொழுது அந்த பெண்தான் சாட்சியாக இருந்து மருத்துவமனை ஆவணங்களில் கையெழுத்திட்டதாக கூறிய அவர், இந்த சிகிச்சையின் முடிவில் தான் ஆண் வடிவத்தை எய்தினாலும், தன்னால் 'முழுமையான' ஆணாக செயல்பட முடியாது என்பதை அந்த பெண் நன்கு அறிந்திருந்தார் என்றும் தெரிவித்தார். 

ஆனால் சிகிச்சைக்கு பிறகு தான் முழுமையான ஆணாக மாறி சிகிச்சை பயன்பாட்டு காலம் முழுமையாவதற்கு உள்ளாகவே தன்னுடைய திருமணம் நடைபெற்றது என்றும், இதனால் தன்னுடைய திருமணம் செல்லாது என்றும் கோரிய அவர், தனக்கு அந்த பெண்ணிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்று தற்பொழுது கோரியுள்ளார்.

அதே நேரத்தில் அந்த பெண்ணும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது கணவரின் மேல் குடும்ப வன்முறை சட்டத்தின்  கீழ் வழக்கு தொடந்துள்ளார். இந்த பாலியல் சிகிச்சை குறித்து தன்னை அவர் ஒப்புக் கொள்ள வைத்ததாகவும், ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னால் ஒருமுழுமையயான் ஆணாக செயல்பட முடியாத ஆத்திரத்தை தன் மீது காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் த ன் மீது சந்தேகப்பட்டு தன்னை வேலைக்கு செல்லக் கூடாது என்று கூறி கணவர் தடுத்ததாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். தன்னைக் கொடுமைப்படுத்தியதாக கணவர்,மாமாமானார்-மாமியார், கணவரின் சகோதரிகள் ஆகிய அனைவரின் மீதும் அவர் புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் ஜீவனாம்சமாகவும், தனியாக ஒரு வீடும் வேண்டும் என கேட்டுள்ளார்.

இந்து திருமண சட்டத்தின்படி ஒரு பெண்ணும், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒரு ஆணும் செய்து கொண்ட திருமணம் செல்லுமா என்பதே நீதிமன்றத்தின் முன் தற்பொழுது  உள்ள கேள்வியாகும்.   கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது அந்த பெண்ணோ, அவரது வழக்குரைஞரோ ஆஜராகாத காரணத்தால் வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com