பர்ஸை நிரப்ப விரைவில் வரவிருக்கிறது 200 ரூபாய் நோட்டுகள்: தயாராகிறது ஆர்பிஐ

2 ஆயிரம் ரூபாயைத் தொடர்ந்து புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க வேண்டும் என்ற பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பர்ஸை நிரப்ப விரைவில் வரவிருக்கிறது 200 ரூபாய் நோட்டுகள்: தயாராகிறது ஆர்பிஐ


புது தில்லி: 2 ஆயிரம் ரூபாயைத் தொடர்ந்து புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க வேண்டும் என்ற பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் நடைபெற்ற வங்கியின் மூத்த அதிகாரிகள் தலைமையிலான கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இந்த திட்டத்துக்கு அதிகாரப்பூர்வ அனுமதி அளித்ததும், புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் வரும் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போதே உயர் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்ற செய்திகள் வெளியாகின. முதலில் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியாகின. தற்போது 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. ஆனால், அப்போது 100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றவில்லை. மாறாக தற்போது 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com