நாரதா விவகாரம்: திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு அமித் ஷா மறுப்பு

மேற்கு வங்கத்தில் 'நாரதா' ரகசிய விடியோ விவகாரத்தில் பாஜகவின் சதி இருப்பதாகக் கூறும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மறுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜியின் சொந்தத் தொகுதியான பவானிப்பூரில் உள்ள குடிசைப் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. நாள்: புதன்கிழமை.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜியின் சொந்தத் தொகுதியான பவானிப்பூரில் உள்ள குடிசைப் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. நாள்: புதன்கிழமை.

மேற்கு வங்கத்தில் 'நாரதா' ரகசிய விடியோ விவகாரத்தில் பாஜகவின் சதி இருப்பதாகக் கூறும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை மேலும் கூறியதாவது: நாரதா இணையதள ரகசிய விடியோவின் பின்னணியில் பாஜகவின் சதித் திட்டம் எதுவுமில்லை. திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் வாங்கும் விடியோவை, உலகமே தொலைக்காட்சியில் பார்த்தது.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ''பாஜக அச்ச' மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே, எல்லா விஷயங்களிலும் அவர் பாஜகவைப் பார்க்கிறார்.
மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, குறிப்பிட்ட பிரிவினரை திருப்திப்படுத்தும் அரசியலையே மேற்கொண்டு வருகிறது.
மாநிலத்தில் தொழில்துறை எதுவும் வளர்ச்சியடையவில்லை. வெடிகுண்டு தயாரிப்புத் தொழில்தான் சிறப்பாக நடைபெறுகிறது. வெளிநாடுகளில் இருந்து கருப்புப் பணம் வருவது தடுக்கப்படவில்லை.
இடதுசாரி முன்னணி தோல்விடைந்த பிறகு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இந்த மாநிலம் வளர்ச்சியடையும் என்று மாநில மக்கள் நம்பியிருந்தனர். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலும் மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. அதேசமயம், பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள், வளர்ச்சியடைந்துள்ளன என்றார் அமித் ஷா.
மம்தா தொகுதியில் அமித் ஷா: இதனிடையே, மம்தா பானர்ஜியின் சொந்தத் தொகுதியான பவானிப்பூரில் உள்ள ஒரு குடிசைப் பகுதிக்கு அமித் ஷா சென்று, அங்குள்ள மக்களை சந்தித்துப் பேசினார்.
அமித் ஷாவை ஆரத்தி எடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்ற அந்தப் பகுதி மக்கள், அவருக்கு ரசகுல்லா, லஸ்ஸி ஆகியவற்றை கொடுத்து உபசரித்தனர். அவர்களிடம் நலம் விசாரித்த அமித் ஷா, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, வரும் 2019-ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடியின் ''வெற்றிப் பயணம்'' மேற்கு வங்கத்திலும் தொடரும் என்று கூறி விடைபெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com