சிறு வியாபாரிகள் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்ய வேண்டும்: மோடி அழைப்பு

சிறு வியாபாரிகள் சரக்கு-சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்
சிறு வியாபாரிகள் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்ய வேண்டும்: மோடி அழைப்பு

சிறு வியாபாரிகள் சரக்கு-சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஜிஎஸ்டி-யால் ஏற்படும் நன்மைகள் தொடர்ந்து கிடைக்கும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்களை பிரதமர் மோடி தனது இல்லத்தில் சந்தித்துப் பேசி வருகிறார். இந்த வரிசையில் 6-ஆவதாக ஹரியாணா, தில்லி, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநில பாஜக எம்.பி.க்களை தில்லியில் திங்கள்கிழமை அவர் சந்தித்தார். அப்போது மோடி கூறியதாவது:
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து சரியாக ஒருமாதமாகிவிட்ட நிலையில், அது நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. சிறு வியாபாரிகளும் ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஜிஎஸ்டி-யால் ஏற்படும் நன்மைகள் தொடர்ந்து அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும். இதனை உறுதி செய்ய எம்.பி.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூத்த குடிமக்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டம், பிரதமர் வய வந்தன யோஜனா திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதில் வய வந்தன யோஜனா திட்டத்தில் மூத்த குடிமக்களின் டெபாசிட்டுகளுக்கு 8 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. இத்திட்டங்கள் மூலம் முதியோர்கள் உரிய வழியில் பயனடைவதை எம்.பி.க்கள் உறுதி செய்ய வேண்டும்.
நாட்டில் உள்ள மலைப் பகுதி மாநிலங்களின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அப்பகுதியில் சுற்றுலாத் துறை மேம்பட்டு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
சத்தீஸ்கரிலும், புதுச்சேரியிலும் பொது விநியோகத் திட்டத்தின் மானியம் மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று மோடி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com